விஸ்வரூபம் எடுத்த வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. நிரந்தர தீர்வுக்கு இதுதான் வழி.. டிடிவி தினகரன்!
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பரவி வருகிறது. அதேபோல் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்களை, அச்சம் காரணமாக வெளியேறி வருவதாகவும் வதந்திகள் பரவியது.
இந்த நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் வதந்தி பரப்பியவர்கள் மீது காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வதந்தி பரப்பியோர் மீது வழக்கு
இதன்படி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தெய்னிக் பத்திரிகையின் ஆசிரியர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் தன்வீர் போஸ்ட் பத்திரிகை உரிமையாளர் முகமது தன்வீர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்
இதனிடையே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ட்வீட்
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

நிபுணர் குழு அமைக்க வேண்டும்
இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தி இருந்தோம்.

நிரந்தர தீர்வு தேவை
ஆனால், அதனை திமுக அரசு காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் திமுக அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications