தினகரன் எடுத்த திடீர் முடிவு... சசிகலாதான் காரணமா? செம்ம அப்செட்டில் தொண்டர்கள் ?
சென்னை : 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி தேர்தலும் நடத்தினால் பங்கேற்கலாம்.. இல்லாவிட்டால் புறக்கணிக்கலாம் என்ற மனநிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நிர்வாகிகளோ தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தால் தான் பங்கேற்பது என்ற மனநிலையில் இருக்கிறார்களாம்.
அதிமுகவில் இருந்து பிரிந்த அமமுக அடுத்த என்ன செய்ய போகிறது என்பது தெரியவில்லை. சசிகலாவின் விஸ்வருபத்திற்காக டிடிவி தினகரன் காத்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
சசிகலாவின் ஆடியோ அரசியலால் ஆடிப்போய் இருக்கும் அதிமுக பெருந்தலைகள, அடுத்த என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்ததுடன் டெல்லி சென்று முறையிட்டதாக சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ் கோபம்
டெல்லி சென்று வந்த பின்னர், சசிகலா குறித்து காட்டமாகவே ஓ பன்னீர்செல்வம் பேசினார். அதிமுகவை யாரும் கைப்பற்றிவிட முடியாது என்று கூறினார். ஆனால் சசிகலாவும், தினகரனும் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றே முனைப்பு காட்டி வருகிறார்கள். இதற்கான வேலைகளை சசிகலா விரைவில் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

நெருக்கடி
கொரோனா லாக்டவுன் காரணமாக அமைதியாக உள்ள சசிகலா இனி தனது விஸ்வரூபத்தை காட்டுவார் என கூறப்படுகிறது. தொண்டர்களை சந்தித்து பேச போகிறார். இது ஒருபுறம் நெருக்கடியாக இருந்தாலும், அதை சுத்தமாக கண்டுகொள்ளாமல் உள்ளாட்சி தேர்தல் வேலையில் அதிமுக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

என்ன செய்ய போகிறது
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான திமுகவும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அறிவித்திருக்கிறார். ஆனால் அமமுக நிலைப்பாடு தான் என்ன என்பது தெரியவில்லை. கட்சியை கலைக்க போகிறாரா அல்லது தொடர்ந்து நடத்த போகிறாரா என்பது தெரியவில்லை

மாநில நிர்வாகிகள்
ஏனெனில் தினகரனை சந்தித்துப் பேசிய மாநில நிர்வாகிகள் இரண்டு பேர், உள்ளாட்சி தேர்தலில் நாம் போட்டியிடுகிறோமா ? அல்லது இடைத்தேர்தலை புறக்கணித்து விடலாமா ? எப்படி பார்த்தாலும் திமுகதானே ஜெயிக்கப் போகிறது ? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அமமுக போட்டியிடும்
அதற்கு தினகரன், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தால் தேர்தலை புறக்கணிக்கலாம். அந்த தேர்தலோடு மேயர் பதவி உட்பட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் சேர்த்து ஒரே கட்டத்தில் தேர்தல் நடந்தால் அ.ம.மு.க. போட்டியிடும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாராம்-

தொண்டர்கள் எண்ணம்
ஆனால், எப்படி தேர்தல் நடந்தாலும் தலைமையிடமிருந்து தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்து உதவினால் மட்டுமே தேர்தலில் களமிறங்குவது என்றும் தேர்தல் பணிகளை கவனிப்பது என்றும் அ.ம.மு.க. தொண்டர்களின் மனநிலையாக இருக்கிறதாம். டிடிவி தினகரன் பாதை எது என்பதை சசிகலாவின் அரசியலே முடிவு செய்யும் என்பதால் , அவரது முடிவுக்காக காத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய டிடிவி தினகரன், உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவாரா இல்லையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications