செந்தில்பாலாஜியின் சுபாவம் அப்படி! திமுகவில் தங்கமாட்டார்! அடித்து ஆருடம் சொல்லும் டிடிவி தினகரன்!
சென்னை: அதிபுத்திசாலித்தனம் என்றைக்குமே ஆபத்து என்றும் செந்தில்பாலாஜி திமுகவில் தங்கமாட்டார் எனவும் ஆருடம் கூறியிருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
செந்தில்பாலாஜியை பற்றி தனக்கு முழுமையாக தெரியும் என்பதால் இதை கூறுவதாகவும் 24 மணி நேரமும் அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பவர் அவர் எனவும் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற அமமுக செயற்குழுவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு நிர்வாகிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் தினகரன் பேசினார்.
அந்த வகையில் திமுக அமைச்சரவை பட்டியல் வெளியான போது, தனது கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், என்னண்ணே செந்தில்பாலாஜி அமைச்சராகிவிட்டார் என தன்னிடம் கேட்டதாகவும், அப்போதே போன வேலையை முடித்துக்கொண்டு வெளியேறிவிடுவார் என தாம் கூறியதாகவும் தெரிவித்தார்.
செந்தில்பாலாஜியை பொறுத்தவரை துருதுருவென இருப்பார் என்றும் ஆனால் அவர் திமுகவில் தங்கமாட்டார் என அப்போதே தாம் கணித்துக் கூறிவிட்டதாகவும் அது தான் நடக்கப் போகிறது எனவும் தினகரன் தெரிவித்தார். எதை வைத்து வேண்டுமானாலும் அரசியல் செய்தால் இது தான் நிலைமை எனக் கூறினார்.
இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது செந்தில்பாலாஜிக்கு கரூர் தொகுதியில் சீட் கொடுக்கலாம் என ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்ததே டிடிவி தினகரன் என்பது கூடுதல் தகவலாகும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications