அணில் ஓடிச்சி.. செந்தில் பாலாஜியும்-செல்லூர் ராஜூவும் ஒன்று தான்.. திமுகவை தாக்கிய சிஆர் சரஸ்வதி
சென்னை: ‛‛தமிழ்நாட்டில் மின்கட்டணம் ஷாக் அடிக்கிறது. அணில் ஓடிச்சி.. மின்கம்பத்தில் தாவிச்சு என கூறும் செந்தில் பாலாஜியும், செல்லூர் ராஜூவும் ஒன்று தான்'' என திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சிஆர் சரஸ்வதி விளாசினார்.
தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், அமமுகவின் செய்தி தொடர்பாளருமான சிஆர் சரஸ்வதி பேசியதாவது:

ஷாக் அடிக்கும் மின்கட்டணம்
தமிழ்நாட்டில் தற்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர சிரமப்படுகின்றனர். விற்கும் விலைவாசிக்கு மத்தியில் கழுத்தில் செயின் போட்டும், கையில் பணம் எடுத்தும் செல்ல முடியாத நிலை உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்கும். ஆனால் இப்போது மின்கட்டணம் ஷாக் அடிக்கிறது. பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பழங்காலத்துக்கு செல்ல...
மின்கட்டணத்தை உயர்த்தி வீட்டில் மின்விசிறி, டிவி இன்றி பழைய காலத்துக்கு சென்றுவிடுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். 100 யூனிட் இலவசம் என திமுக சொல்கிறது. மாதம் ஒருமுறை கணக்கு எடுத்தால் தானே 100 யூனிட் போக பில் போட முடியும். 2 மாதத்துக்கு ஒருமுறை ஏன் கணக்கு எடுக்கிறீர்கள் என கேட்டால் அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி புது விளக்கம் கொடுப்பார்.

செல்லூர் ராஜூ-செந்தில் பாலாஜி
ஏன் மின்தடை ஏற்படுகிறது என கேட்டால் அணில் ஓடிச்சி.. கரண்ட் கம்பம் மீது தாவிச்சி என அற்புதமான கண்டுபிடிப்பை செந்தில் பாலாஜி கண்டுபிடித்து கூறுகிறார். துரோக கூட்டத்தில் இருக்கும் செல்லூர் ராஜூ, தெர்மாக்கோல் போட்டு தண்ணீர் ஆவியாவதை தடுப்பதாக கூறினாரே அதேபோல் தான் செந்தில்பாலாஜியின் செயல்பாடும் உள்ளது.

மக்களுக்கு கூடுதல் சுமை
அமமுக பொதுக்குழு மிகவும் அமைதியாக நடந்தது. ஆனால் ஸ்டாலின் பொதுக்குழுவில் புலம்புகிறார். பொன்முடி சிரிக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை நடக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சைக்கிள், கம்ப்யூட்டர், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுத்த இயக்கம் தான் அதிமுக. தற்போது மின்கட்டணம், சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு திமுக ஆட்சி சுமையை கொடுத்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications