சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை- திமுகவுக்கு செக்.. ஆக மொத்தம் 3 அஜென்டா.. பலே பிளான்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: அமமுக, அதிமுக இணைப்பு, சசிகலா விடுதலை மற்றும் திமுக எந்த சூழலிலும் ஜெயிக்க கூடாது இந்த மூன்றுதான் இப்போது தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பெரும்போராட்டம் நடத்தும் லாபியிஸ்டுகளின் பிரதான வேலையாம்.

Recommended Video

    அமுமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை... திமுகவுக்கு வைக்க போகும் செக்

    தினகரன் அணி, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி அதிமுக ஏற்கனவே பிளவுபட்டு இப்போது தினகரன் தனி கட்சியாகப் போய்விட்டார். அதிமுகவின் தலைவர்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருந்து வருகின்றனர்.

    இன்னொரு பக்கம் திமுக தலைமையில் பல கட்சிகள் இணைந்து ஒரு வலிமையான கூட்டணி இருக்கிறது. இப்படியே திமுக தேரை நகர்த்திக் கொண்டு போனால் சட்டசபை தேர்தல் எனும் கிரிவலத்தை எளிதாக நடத்தி முடித்து ஆட்சிக் கட்டிலில் அக்கட்சி அமர்ந்துவிடும். அப்படி ஒரு நிகழ்வு எந்த சூழ்நிலையிலும் நடந்தேவிடக் கூடாது என்பதுதான் தமிழகத்தில் உள்ள அந்த லாபியிஸ்டுகள் நோக்கம்.

    பரபரப்பு.. ஊழலை சுட்டி காட்டிய பாஜக பிரமுகரை.. செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தாரா திமுக எம்எல்ஏ?பரபரப்பு.. ஊழலை சுட்டி காட்டிய பாஜக பிரமுகரை.. செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தாரா திமுக எம்எல்ஏ?

    லாக்டவுனில் பிஸியோ பிஸி

    லாக்டவுனில் பிஸியோ பிஸி

    இதற்காக பாஜகவை இணைத்துக் கொண்டு கிடைத்த பக்கமெல்லாம் கோல் அடித்துவிடலாமா என இரவும் பகலுமாக ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொரோனா லாக்டவுன் காலம் இந்த லாபியிஸ்டுகளுக்கு ரொம்ப வசதியாகவே போய்விட்டது. இப்போது 24 மணிநேரமும் இதே வேலையாகத்தான் இந்த லாபியிஸுகள் பிஸியோ பிஸியாக இருக்கிறார்கள்.

    ஆன்மீக அரசியலுக்கு சிக்னல்

    ஆன்மீக அரசியலுக்கு சிக்னல்

    இவர்களைப் பொறுத்தவரை பாஜக தலைமையில் ஒரு அணி அமைத்தால் தேறுமா? என முதலில் முயற்சித்துப் பார்த்தார்கள். பாஜகவின் பெயரை சொன்னாலே குட்டி கட்சிகள் கூட பதினாறு அடி தூரம் தலைதெறிக்க ஓடுகிறது என்பதால் அது வேலைக்கு ஆகாது என மூட்டை கட்டினர். பின்னர்தான் பாஜகவின் இன்னொரு முகமாக ஆன்மீக அரசியலை அரங்கேற்றம் செய்து பார்த்தனர்.

    புதிய வியூகம்

    புதிய வியூகம்

    ஆன்மீக அரசியல் எடுத்த எடுப்பிலேயே மக்கர் செய்துவிட்டது.. அது ஸ்டார்ட் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கொரோனா மிகப் பெரும் முட்டுக்கட்டையாகிவிட்டது. ஆன்மீக அரசியலை நம்பி ஆச்சு ஆச்சு 3 ஆண்டுகாலம் என்கிற கவலை நிலைமையில்தான் லாபியிஸ்டுகளுக்கு. இதனால்தான் இப்போது அங்கே போய் இங்கே போய் மோதாமல் ஆகிற வழி எதுவோ அதை செய்வோம் என படுவேகமாக களமிறங்கிவிட்டனர்.

    புதுவை சந்திப்புகள்

    புதுவை சந்திப்புகள்

    இதில் முதல்கட்டமாக எப்படியாவது அதிமுகவை வலிமைப்படுத்திவிடுவது என்பதுதான் அவர்களது நோக்கம். இதற்காகவே தினகரன் தலைமையிலான அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான வேலைகளை சீரியசாகவே இந்த லாபிவாலாக்கள் செய்து வருகிறார்கள். தினகரன் தரப்பு இதற்கு பிணையாக கேட்பது சசிகலாவின் விடுதலையும் வழக்குகள் அற்ற வாழ்க்கையும்தான். இதை பெற்றுத்தருவதாக லாபிவாலாக்கள் அண்மையில் புதுவையில் நடைபெற்ற ரகசிய சந்திப்பில் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்களாம்.

    திமுக கூட்டணிக்கு வேட்டு

    திமுக கூட்டணிக்கு வேட்டு

    சரி சசிகலா வெளியே வந்து அதிமுகவை ஒருங்கிணைத்துவிட்டாலே திமுகவுக்கு ஆப்பு வைத்துவிட முடியுமா? என்கிற அடுத்த சந்தேகத்துடன் இன்னொரு வேலையையும் இந்த லாபி ஆர்மி செய்து கொண்டிருக்கிறது. வலிமையான அதிமுக, சசிகலா விடுதலை.. இதன்மூலம் உங்க கட்சிக்கு கணிசமான தொகை கிடைக்கும்.. அதற்கு நாங்க கியாரண்டி.. திமுக கூட்டணியைவிட்டு ஓடிவந்துவிடுங்க.. என்கிற பேரங்களும் களைகட்டி வருகிறதாம். சீட்டுகள் பற்றியும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை பற்றியும் கிஞ்சித்தும் கவலைப்படாத கோஷவாத கட்சிகள் எதுக்கும் துண்டு போட்டு வைப்போம் என ரெடியாகவும் இருக்கிறார்களாம்.

    க தலைமையிலான டீம்தான்

    க தலைமையிலான டீம்தான்

    இப்படி திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கான அத்தனை மூவ்களையும் "க" தலைமையிலான டீம்தான் கனகச்சிதமாக செய்து வருகிறதாம். இதன் ஒருபகுதிதான் அதிமுகவுக்கு தேர்தல் வியூக வல்லுநர் குழு இறக்கிவிடப்பட்டதும்கூடவாம். கொரோனா முடியட்டும்.. தமிழக அரசியல் எத்தனை கூத்துகளைத்தான் பார்க்குமோ? என்கிற அங்கலாய்ப்புகள் அரசியல்வட்டாரங்கள் ரொம்பவே அதிகமாக இருக்கிறது.

    English summary
    According to the soruces TTV Dhinakaran's AMMK may join with AIADMK before the TamilNadu Assembly Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X