ஏற்கனவே நெருக்கடி.. மனசாட்சியோடு யோசித்து பார்த்தீங்களா? திமுக அரசை சாடிய டிடிவி தினகரன்!
சென்னை: தமிழகத்தில் திருத்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து தரப்பினரின் எதிர்ப்பை மீறி மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்த நிலையில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. அதன்படி, புதிய மின் கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும் என்றும், வரும் 2027-ம் ஆண்டு வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும் தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினரும் கண்டனம்
இதன்மூலம் தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வரும் மின் கட்டணம், கணிசமாக உயர உள்ளது. தமிழக அரசின் இந்த மின்கட்டண உயர்வுக்கு, பொதுமக்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏழை - எளிய மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசுக்கு கண்டனம்
அந்த வகையில், பொதுமக்களை பாதிக்கும் மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது

கட்டண உயர்வு
பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்று முதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும். மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் திமுக அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் என டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications