சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Amphan cyclone: இன்று உருவாகிறது ஆம்பன் புயல்.. எங்கெங்கு மழை பெய்யும்.. தமிழகத்திற்கு என்ன பயன்?

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் இன்று ஆம்பன் புயல் உருவாகிறது. இந்த புயலால் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Recommended Video

    Amphan cyclone : Tamilnadu Rain Update

    தமிழகத்தில் பருவமழை பொய்த்து கோடை காலம் கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி முதல் கத்திரி வெயில் வேறு தொடங்கியது. இது இந்த மாதம் 28ஆம் தேதி வரை இருக்கும்.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் அதாவது அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 13 ஆம் தேதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15 ஆம் தேதி உருவானது. தற்போது இது இன்று புயலாக மாறியுள்ளது.

    பல காலமாக விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியானது.. தடைகள் தகர்க்கப்படும்- நிர்மலா அதிரடி பல காலமாக விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியானது.. தடைகள் தகர்க்கப்படும்- நிர்மலா அதிரடி

    18-ஆம் தேதி

    18-ஆம் தேதி

    இந்த புயல் நாளை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் வடகிழக்கு திசை நோக்கி நகரும். அப்போது காற்று 65 கி.மீ. மீட்டர் முதல் 75 கி.மீ வரை வீசக் கூடும். இதனால் மேற்கு வங்க கடல், வங்கக் கடல் பகுதி, குமரிக் கடல், கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தென் கடலோர மாவட்டங்கள்

    தென் கடலோர மாவட்டங்கள்

    இன்று புயலாக மாறிய இதன் பெயர் ஆம்பன் என வைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் கரையை கடக்காது. இதனால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. எனவே தமிழகத்தில் மழை இருக்காது. ஆனால் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலால் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும்.

    ஆம்பன் புயல்

    ஆம்பன் புயல்

    இந்த புயலுக்கு ஆம்பன் என பெயர் சூட்டியது தாய்லாந்து. இந்த புயலால் கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழை பெய்ய வாய்ப்புண்டு. அது போல் ஒடிஸா, மேற்கு வங்கம், அந்தமான் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் இந்த புயலால் தமிழகத்திற்கு நேரடி மழை கிடைக்கும் என்பதை மறந்துவிடலாம்.

    சென்னை

    சென்னை

    ஆனால் மறைமுகமாக இடியுடன் கூடிய மழை உள்மாவட்டங்களில் பெய்து அது கடலோரம் நோக்கி நகரும். சென்னைக்கு மேகக் கூட்டங்களின் நகர்வை வைத்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 19ஆம் தேதி முதல் சென்னை, ஆந்திராவில் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் தற்போது 15 ஆம் தேதி வரை சென்னையில் வெப்பநிலை 37 டிகிரியை தாண்டவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி ஆகும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    English summary
    Amphan cyclone today formed in south west part of Bay of Bengal. It gives rain to Western Ghats and some parts of Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X