கருப்பு பூஞ்சை மருந்து உற்பத்தி அதிகரிப்பு..7000த்திலிருந்து ரூ.1200ஆக விலை குறைப்பு
சென்னை: கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்து விநியோகம் மே 31ம் தேதி முதல் துரிதமாக தொடக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிம் நிலையலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
கண்களில் வீக்கம், கண் சிவப்பு போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தாலும் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பல மாநிலங்கள்
கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனவே ராஜஸ்தான், தெலுங்கானா போன்ற மாநிலங்கள், கருப்புப் பூஞ்சை பாதிப்பை கொள்ளைத் தொற்றாக அறிவித்துள்ளன.

கருப்பு பூஞ்சை மருந்து
இதனிடையே கருப்புப் பூஞ்சைக்கு ஒரு சில மாநிலங்களில் ஆம்ஃபோடெரிசின்-பி என்ற மருந்து வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. ஆனால் இதுவரை 1 நிறுவனம் மட்டுமே இந்த மருந்தை தயாரித்தது. இப்போது மகாராஷ்டிர மாநிலம் வர்தா ஜெனிடிக் லைப் சைன்ஸ் நிறுவனத்திலும் கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மருந்து விலை
இந்த மருந்து ஒரு டோஸ் விலை முன்பு, 7000ஆக இருந்தது. இப்போது, சப்ளை அதிகரிப்பதால், ஒரு டோஸ் விலை பல மடங்கு குறைந்து, ரூ.1200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் வரும் திங்கள்கிழமை முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த மருந்து உற்பத்தியை துரிதப்படுத்த அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இதன் விளைவாக சப்ளை அதிகரிக்க உள்ளது.

ஊசி மருந்து
முதல் கட்டமாக மகாராஷ்டிரத்திலுள்ள மருத்துவமனைகளுக்கும், பின்னர், கருப்புப் பூஞ்சை தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கும், இந்த மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊசி வடிவிலான மருந்து என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications