அம்ரித் பாரத்.. சர்வதேச தரத்தில் உயரும் தமிழக ரயில் நிலையங்கள்.. தெற்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்
சென்னை: தெற்கு ரயில்வேயின் வருமானம் இந்த நிதியாண்டில் உயர்ந்துள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று கூறினார். எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட, 13 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்தில் உயர்த்தும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் என்ற திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். எஸ்கலேட்டர் வசதி கொண்டு வரப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்படும். நடைமேடைகள் மேம்படுத்தப்படும். 5ஜி இணையச் சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். காத்திருக்கும் அறைகள் அமைக்கப்படும்.
கூடுதல் நடைமேடைகள் கொண்டு வரப்படும். வாகனங்கள் நிறுத்தும் வசதி, சிசிடிவி கேமராக்கள், நுழைவு வாயில்களை புதுப்பொலிவு பெறச் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி பல ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. தற்போது ரயில்களை பயன்படுத்து பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றிவைத்து பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதுடன், ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ரயிலின் வேகமும் அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றார்.
அப்போது பேசிய அவர், "தெற்கு ரயில்வே நடப்பு நிதியாண்டில், 9,482 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தை விட, 5 சதவிகிதம் அதிகமாகும். இதுவரை, 32.24 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளோம். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 93 ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளில், முதல் கட்டம் மார்ச் மாதத்தில் நிறைவடையும். நாகர்கோவில் டவுன் முதல் கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில், திருநெல்வேலி - மேலப்பாளையம் ஆகிய வழித்தடங்களில் நடக்கும் ரயில் பாதை பணிகள், வரும் பிப்ரவரியில் முடிவடையும்.
எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட, 13 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்தில் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில் மணிக்கு 130 கி.மீ, வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 12 வழித்தடங்களில் மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
நாகர்கோவிலில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. வழிநெடுக பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன்












Click it and Unblock the Notifications