தமிழகத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமுதா ஐஏஎஸ் எந்த துறை பாருங்க
சென்னை: பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக இருந்து மாநில அரசுப் பணிக்கு திரும்பிய அமுதா ஐஏஎஸ், தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஸ் அண்மையில் மாநில பணிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரைச் சேர்ந்த அமுதா 1994 ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார். இவர் கடலூரில் துணை ஆட்சியராக பணியை தொடங்கிய நிலையில் தருமபுரி ஆட்சியர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

சிறப்பான செயல்பாடுகள்
இவர் 2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது அந்த பாதிப்புகளை சரி செய்யும் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி களத்தில் இறங்கி பலரது உயிர்களை காப்பாற்றினார். இவரது திறமையை மதித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த போது அவரது இறுதிச் சடங்கை நடத்தும் பொறுப்பை அமுதாவிற்கு ராமநாதபுரத்தில் வழங்கியது அப்போதைய அதிமுக அரசு.

3 ஆளுமைகள்
அதேபோல, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் இறுதிச் சடங்கை ஏற்று நடத்தும் பொறுப்பும் அமுதாவிற்குதான் கொடுக்கப்பட்டது. தமிழகத்தின் 3 ஆளுமைகளின் இறுதிச் சடங்குகளை ஏற்று நடத்தும் பொறுப்பு அமுதாவிற்கு கொடுக்கப்பட்டதை வைத்தே அவரது திறமையை புரிந்து கொள்ள முடியும்.

கருணாநிதி மறைவு
அதிலும் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய முடியுமா இல்லையா என்பது தெரியாத நிலையில், கோர்ட்டில் கேஸ் நடைபெற்றதால், பெரும் பரபரப்பு நிலவியது. நீதிமன்றம் மெரினாவில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டது. இதன்பிறகு அந்த பொறுப்பு அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்தே மணி நேரம்தான் இருந்தது. அதற்குள் அனைத்து வேலைகளையும் முடித்தாக வேண்டும் என்ற இக்கட்டான நிலைமை அவருக்கு இருந்தது. ஆனால், சளைக்கவில்லை. மின்னல் வேகத்தில் வேலைகளை செய்தார் அமுதா ஐஏஎஸ்.

குடும்ப உறுப்பினராக மாறிய அமுதா
கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்வில், அங்குள்ள பலரின் கவனத்தை ஈர்த்தவர் அமுதா. வெள்ளை நிற சுடிதார் அணிந்து கொண்டு, அங்கும் இங்கும் நடந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்தார். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்தானோ இவர் என்று டிவியில் பார்த்த பலரும் நினைத்தனர். கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்த குழிக்குள், அவரது குடும்ப உறுப்பினரை போல மணலை போட்டவரும் இந்த அமுதாதான்.

மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அமுதா
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியராக பணிமாற்றம் செய்யப்பட்டு பிறகு பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு பணியில் 3 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் அவர் மீண்டும் தமிழக அரசு பணிக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். அவரை முதல்வர் ஸ்டாலின் தனது செயலாளர்களில் ஒருவராக நியமிப்பாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கின. மிக முக்கியமான உள் துறைக்கு செயலாளராக்கப்படுவார் என்ற ஹேசியங்கள் வலம் வந்தன. இந்த நிலையில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிராமப்புறங்களுக்கு ஸ்டாலின் அரசு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது என்பதை, இந்த உத்தரவு உறுதி செய்கிறது என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

10 ஐஏஎஸ் அதிகாரிகள்
மொத்தம் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை இன்று பணியிடமாற்றம் செய்துள்ளது அரசு. இதோ அதுகுறித்த அரசு அறிவிப்பு: தொழிற்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிற்துறை முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தீப் சக்சேனா
அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளர் கோபால், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, நீர் வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த, தயானந்த் கடாரியா, பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பீலா ராஜேஷ்
விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா, எனர்ஜி துறைக்கான முதன்மைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனர்ஜி துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை முதன்மைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த அபூர்வா, இளைஞர் நலத் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறித் துறை மற்றும் டெக்ஸ்டைல் கமிஷனராக இருந்த பீலா ராஜேஷ், நில சீர்திருத்தம் கமிஷனர் மற்றும் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications