மூட்டை கட்டி தூக்கிட்டு போனாங்க..மாயமாகும் சென்னை பூனைகள்! பகீர்.. ரோட்டுக் கடைக்கு 100க்கு விற்பனை?
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பூனைகள் அடிக்கடி மாயமானதாக புகார் எழுந்த நிலையில் நேற்று ஒருவர் மூட்டை மூட்டையாக பூனைகளை கட்டி எடுத்துச் சென்றதை தான் பார்த்ததாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்திருக்கிறார்.
சாலையோர கடைகளில் சிக்கன் பிரியாணிக்கு பதிலாக காக்கா பிரியாணி விற்பதாக ஒரு நகைச்சுவை காட்சி உண்டு. அதுமட்டுமில்லாமல் பூனை பிரியாணி, நாய் பிரியாணி என அவ்வப்போது சென்னையில் சில புரளிகள் கிளப்பப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் வளர்ப்பு பூனைகள் காணாமல் போனதாக விலங்குகள் நல அமைப்புகளுக்கு தொடர் புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரித்த போது வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளை குறிப்பிட்ட சிலர் பிடித்தது தெரியவந்தது.
மாயமாகும் பூனைகள்: அவ்வாறு பிடிபடும் பூனைகளை கொடூரமாக கொன்று அதனை கறியாக வெட்டி ஆட்டிறைச்சி எனக் கூறி சாலையோர பிரியாணி கடைகளுக்கு குறைந்த விலையில் விற்று வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் நடத்திய வேட்டையில் பலர் சிக்கினார். அவர்களிடமிருந்து 40 பூனைகள் கைப்பற்றப்பட்டன. பூனைகளைப் பிடித்து பிரியாணி கடைகளுக்கு விற்பனை செய்பவர் எதிராக நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரித்திருந்தனர்.
பிரியாணி விற்பனை: இந்நிலையில் தற்போதும் சென்னையில் பல இடங்களில் வலைகளை போட்டு பூனைகளைப் பிடித்து விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. பூனைகளை கொதிக்கும் நீரில் போட்டு கொன்று விட்டு அதன் இறைச்சியை சாலையோர உணவகங்களுக்கு விற்று வருகின்றனர். பூனை இறைச்சியை பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கும் போது அவை பெரும்பாலும் டாஸ்மாக் ஓரமாக இருக்கும் கடைகளுக்கு விற்கப்படுகின்றன.
இரவில் கடத்தல்: இதனால் வாடிக்கையாளர்களுக்கு அது என்ன வகையான பிரியாணி என்பதே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஒருவர் பூனைகளை மூட்டையாக பிடித்து சென்று விற்பனை செய்ததை பார்த்ததாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் வகையில் புகார் அளித்திருக்கிறார். சென்னை எழும்பூரைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஜோஸ்வா பணி முடிந்ததும் இரவு நேரங்களில் சாலையோரம் இருக்கும் நாய்கள் பூனைகள் உள்ளவற்றிற்கு உணவளித்து வருகிறார்.
ஆர்வலர் புகார்: நேற்று இரவு பணி முடிந்து விலங்குகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் ஒரு சிறுவனுடன் மூட்டை ஒன்றை கட்டிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த ஜோஸ்வா அவரிடம் சென்றபோது ஒன்றும் இல்லை வெறும் மூட்டை தான் எனக் கூறியிருக்கிறார். அப்பொழுது அவரிடம் இருந்து பூனை ஒன்று தப்பி ஓடி இருக்கிறது. தொடர்பாக கேட்டபோது ஜோஸ்வாவை அந்த நபர் தள்ளிவிட்டு ஓடி இருக்கிறார். தொடர்ந்து அந்த நபரை துரத்திச் சென்ற ஜோஸ்வா சென்றபோது அங்கும் ஒரு பூனையை பிடித்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து கேட்டபோது 100 ரூபாய் கொடுத்தால் பூனையை விட்டு விடுகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
நடவடிக்கை தேவை: மேலும் இந்த பூனையை சாலையோரம் இருக்கும் கடைகளுக்கு விற்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் மேலும் இதையடுத்து அவர் ஏற்கனவே கட்டி இருந்த மூட்டையை பார்த்தபோது அதில் பத்துக்கும் மேற்பட்ட பூனைகள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஜோஸ்வா விடுவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இதுபோன்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இப்படியே போனால் சென்னையில் பூனை இனமே அழிந்துவிடும் அவற்றை ஜூ-வில் மட்டுமே பார்க்க முடியும் என எச்சரிப்பதோடு இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications