ஸ்டேஷனில் நிற்காமல் சென்ற மின்சார ரயில்.. சென்னையில் பயணிகள் அதிர்ச்சி.. ஓட்டுனரிடம் வாக்குவாதம்
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் ஒன்று புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்பது போல ஸ்லோ செய்துவிட்டு ஆனால் நிற்காமல் சென்று விட்டது. இதனால் அந்த ரயில் நிலையத்தில் இறங்க முடியாமல் தவித்த பயணிகள் ரயில் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் புற நகர் மின்சார ரயில்கள் பயணிகளின் போக்குவரத்திற்கு பெரும் வசதியாக உள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் சென்னையில் சாலை வழி பயணம் என்றால் நினைத்த நேரத்தில் செல்ல முடியாத நிலையே உள்ளது. அதுவும் பீக் நேரங்களில் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பற்றி தனியாக சொல்ல வேண்டியது இல்லை.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலைகளில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். இதனால் சென்னை மக்களுக்கு நகரத்திற்குள் பயணிக்க மின்சார ரயில்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு வரையிலும், சென்னை சென் ட்ரலில் இருந்து அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும். குறிப்பாக அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் புறநகர் ரயில்களில் அதிகம் பயணம் செய்துவதுண்டு. இதனால் பீக் அவர்களில் ரயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதும். ரயில்கள் சில நிமிடங்கள் தாமதம் ஆனாலும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். புற நகர் ரயில்களை பொறுத்தவரை சில நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்க முடியும்.
எடுத்துக் காட்டாக சென்னை எழும்பூரில் இருந்து 2 கி.மீட்டர் இடைவெளிக்கும் சென்னை பார்க் ஸ்டேஷன் வந்து விடும். இப்படி 5 நிமிட இடைவெளிக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலயங்களை கடந்து விடும். சில ரயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் கூட நிற்காமல் சில வினாடிகள் மட்டுமே நின்று செல்வதை காண முடியும். இந்த நிலையில் தான் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் நேற்று புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றுள்ளது.
புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்பது போல ரயில் நின்றதாகவும் ஆனால், பயணிகள் இறங்குவதற்கு முன்பாக ரயில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அரக்கோணம் வந்ததும் லோகோ பைலட்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications