"இந்தாண்டு தங்கம் விலை எகிறும்.. நிச்சயம் இதுதான் நடக்கும்!" ஆனந்த் சீனிவாசன் நறுக்! எவ்வளவு உயரும்
சென்னை: இந்த ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும். தங்கம் விலை தொடர்ந்து உயர என்ன காரணம் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த இரு வாரங்களாகத் தங்கம் விலை நல்ல ஏற்றம் கண்டது. இப்போது தங்கம் விலை ரூ.5900ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியர்களைப் பொறுத்தவரைத் தங்கம் என்பது வெறும் ஆபரணங்கள் மட்டுமில்லை.. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தங்கத்தையே மிகச் சிறந்த சேமிப்பு மற்றும் முதலீடுகளின் ஒரு கருவியாகப் பார்க்கிறார்கள்.
ஆனந்த் சீனிவாசன்: இதன் காரணமாகவே திருமணம் உள்ளிட்ட அனைத்து நல்ல காரியங்களிலும் தங்கம் பிரதான இடத்தை பெறுகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை ஏன் அதிகரிக்கிறது... வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பவை குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது வீடியோவில் கூறுகையில், "தங்கம் விலை ரூ. 5900ஐ தாண்டிவிட்டது. இத்துடன் நாம் ஜிஎஸ்டி தொகையைச் சேர்த்தாலே ரூ. 6100ஐ தாண்டிவிடும். இதுபோக நகையாக எடுத்தால் செய்கூலியும் தர வேண்டி இருக்கும். தங்கம் விலை இனி இப்படிதான் இருக்கும். இதற்குப் பிறகு தங்கம் விலை குறையும் என்று நினைக்க வேண்டும். இதற்குப் பிறகு தங்கம் விலை அதிகரிக்கவே செய்யவும்.
பார்வை 1: சர்வதேச பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இப்போது இரண்டு பார்வை இருக்கிறது. முதலில் அமெரிக்காவில் recession எனப்படும் பொருளாதார மந்தநிலை ஏற்படாது. மந்தநிலை ஏற்படுவதற்குள் அமெரிக்க மத்திய வங்கியே வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கும். குறைந்தது 3 முறை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்கிறார்கள். இன்னும் சில 8 முறை கூட குறைப்பார்கள் என்கிறார்கள்.
இதன் காரணமாகவே அமெரிக்க டிரஸரி விகிதம் கூட கடுமையாகக் குறைந்துள்ளது. எனவே, அமெரிக்கா பொருளாதாரம் எந்தவொரு மேஜர் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். உலக சந்தையில் பலரும் இதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
பார்வை 2: அடுத்த மற்றொரு பார்வை என்னவென்றால், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்கத் தொடங்கினால் அப்போது பணவீக்க பிரச்சினை மீண்டும் வரும். எனவே, குறைந்தது சில மாதங்களாவது வட்டி விகிதத்தை இப்படியே வைத்திருக்க வேண்டும். வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் அது 2024 பிற்பகுதியில் தான் வரும். எனவே, அமெரிக்காவில் மந்தநிலை வரும் என்பது இவர்கள் பார்வை.
என்ன நடந்தாலும் தங்கம்தான்: இந்த இரு தரப்பு சொல்வதில் எது நடக்கும் என்பதை 2024ஐ நிர்ணயம் செய்யும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.. தங்கம் விலை நிச்சயம் மேலே செல்லும். மந்த நிலை வந்தாலும் தங்கம் விலை அதிகரிக்கும்.. வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் தங்கம் விலை உயரும், எனவே, எது நடந்தாலும் நமக்கு பாசிட்டிவ் முடிவுகளைத் தருவதாகத் தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த நிறுவனங்கள் இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications