திடீரென தங்கம் வாங்குவதை நிறுத்தும் இந்தியர்கள்! இது என்ன புதுசா இருக்கு- விளக்கும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: நமது நாட்டில் தங்கம் தான் பாதுகாப்பான முதலீட்டாக கருதப்படுகிறது.. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்போதும் தங்கத்தையே வாங்குகிறார்கள். ஆனால், கடந்த சில காலமாக இந்தியர்கள் தங்கத்தை வாங்குவது குறைந்து வருவதாக பரபர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இதற்கான காரணத்தை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இந்தியாவில் தங்கம் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதலீடாக இருக்கிறது. பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் கூட அனைத்து குடும்பங்களும் குறைந்தது 200 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்றே தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனால், கடந்த சில காலமாக யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தியாவில் தங்கம் விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.. இதற்கிடையே இதற்கான காரணத்தை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், "தங்கம் விலை ரூ.6770 என்ற ரேஞ்சில் இருக்கிறது. இந்தியாவில் இப்போது மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதற்கு அதிக வரியும் ஒரு காரணம். இதன் காரணமாக சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது போல தங்க கடத்தல் சம்பவங்களும் நடக்கிறது.
இந்தியாவில் தங்கம் விலை சட்டென அதிகரித்துள்ளது. தங்கம் விலை 24% வரை அதிகரித்துள்ளது. நமது நாட்டில் பெரும் பணக்காரர்கள் தங்கம் உள்ளிட்ட விலையுர்ந்த பொருட்களை எளிதாக வாங்க முடிகிறது. ஆனால் மிடில் கிளாஸ் மக்கள் மற்றும் ஏழைகளால் தங்கம் வாங்க முடிவதில்லை. இதை தான் K Shape ரிக்கவரி என்கிறோம்.
உலக நாடுகள்: சிலர் மத்திய கிழக்கு பகுதி, உக்ரைன், சீனா நாடுகளால் தான் தங்கம் விலை அதிகரித்துவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால், நாம் கிராமுக்கு ரூ.1000க்கு மேல் வரி போடுகிறோம். அது யார் கண்ணிற்கும் தெரிவது இல்லை.
ஒட்டுமொத்தமாக கடந்தாண்டு இந்தியர்கள் 6% வரை குறைவாக தங்கம் வாங்கியுள்ளனர். அதேநேரம் சீனாவில் 10% வரை மக்கள் அதிகமாக தங்கம் வாங்கியுள்ளனர். அதாவது முன்பு 100 கிராம் நாம் வாங்கினோம் என்றால் இப்போது 94% கிராம் தான் வாங்குகிறோம். அதேநேரம் சீன மக்கள் 100 கிராமுக்கு பதிலாக 110 கிராமாக வாங்குகிறார்கள்.
தங்கம் விற்பனை: அடுத்தாண்டு மார்ச் வரை இந்தியாவில் தங்கம் விற்பனை இப்படியே தான் இருக்கும் என வல்லுநர்கள் கணிக்கிறார்கள். இப்போது இருக்கும் நிலையை பார்த்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெள்ளி அல்லது 14 மற்றும் 16 கிரேட் தங்கத்தை தான் பார்க்க வேண்டி இருக்கும் போல.. ஆனால, வங்கிகள் அதை ஒரு செக்கியூரிட்டியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.. அது ஒரு சிக்கல்.
குறைவது ஏன்: மேலும், நமது நாட்டில் உள்ள பல பிரபல நகைக்கடைகளின் விற்பனை குறைந்துள்ளன. இது தங்கம் வாங்குவதை மக்கள் குறைத்துள்ளார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. மக்கள் கையில் இப்போது பணம் இல்லை. இதன் காரணமாகவே தங்கம் வாங்குவதில்லை.. அதாவது சந்தையில் தங்கம் அதிகம் உள்ளது.. ஆனால் அதை வாங்க தான் மக்கள் ரெடியாக இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications