பணம் சம்பாதிக்க இருப்பது இரண்டே ரூல்ஸ்.. இதை எப்போதும் மறக்காதீங்க! சீக்ரெட் உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், அதற்காகச் சரியான முதலீடுகளைச் செய்பவர்கள் சிலர் தான். அப்படி முதலீடு செய்யும் நாம் பின்பற்ற வேண்டிய இரண்டு முக்கிய ரூல்கள் இருப்பதாகச் சொல்கிறார் ஆனந்த் சீனிவாசன். உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராக அறியப்படும் வாரன் பஃபெட் இந்த ரூல்ஸ்களை கூறியதாகக் குறிப்பிட்ட ஆனந்த் சீனிவாசன். அவை என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.
பணக்காரன் ஆக நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனால், அந்த இலக்கை அனைவராலும் எட்ட முடிவதே இல்லை. பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சேமிப்பின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து விளக்கி வருகிறார்.

ஆனந்த் சீனிவாசன்: நமது நாட்டில் மாத சம்பளத்தை மட்டும் வைத்து எப்போதும் பணக்காரர் ஆகவே முடியாது என்று அவர் முன்பு ஒரு வீடியோவில் குறிப்பிட்டு இருப்பார். அதாவது , ஒரு லெவலுக்கு மேல் நமது சம்பளம் சென்றுவிட்டால் வரி என்றே பெரும் தொகையைக் கட்ட வேண்டி இருக்கும் என்றும் இதனால் பணத்தைச் சரியான விதத்தில் முதலீடு செய்வதன் மூலமாக மட்டுமே பணக்காரர் ஆக முடியும் என்றும் கூறியிருந்தார்..
வாரன் பஃபெட்: இத்கிடையே முதலீடு செய்யும் போது இரண்டு முக்கிய ரூல்ஸ் இருப்பதாக அவர் தனது சமீபத்திய வீடியோவில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வாரன் பஃபெட்டின் 94வது பிறந்த நாள் நேற்று ஆக. 30ம் தேதி கொண்டாடப்பட்டது. 94 வயதான பஃபெட் ஒரு சகாப்தத்தையே படைத்துள்ளார் என தாராளமாகச் சொல்லலாம். அவரது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் கடந்த 1965ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20% வரை லாபம் கொடுத்துள்ளது. சில ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் லாபம் மோசமாக இருந்து இருக்கலாம். சில முறை மிகச் சிறப்பாக இருந்து இருக்கலாம்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக அவர் எப்போதும் தான் சொன்னதைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதன் மூலம் மிகச் சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
டிரில்லியன் டாலர் நிறுவனம்: அவர் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களை வாங்கினார். அதில் ப்ரீயம்களாக வந்த தொகையைக் கவனமாக முதலீடு செய்தே அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினார். அவரது பிறந்த நாளுக்கு ஓரிரு நாள் முன்பு தான் இந்த பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் ஒரு டிரில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுத்தது.
இதற்கு முன்பு வரை 6 நிறுவனங்கள் இந்த ஒரு டிரில்லியன் மதிப்பைக் கடந்துள்ளன. ஆனால், அவை ஆறுமே டெக் தொடர்பான நிறுவனங்கள் தான். ஆனால், வாரேன் பஃபெட் டெக்னாலஜி நிறுவனம் எதையும் நடத்தவில்லை. அவருக்கு ஆப்பிள் நிறுவனத்தில் குறிப்பிட்ட பங்கு மட்டுமே இருக்கிறது. அவரிடம் இருக்கும் ஒரு டெக்னாலஜி இதுதான்.
கொள்கை: பல சொந்த ஆப்ரேடிங் பிஸ்னஸ்களை அவர் தன்வசம் வைத்துள்ளார். இதன் மூலம் அவர் மிகச் சிறந்த முதலீட்டாளராக இருக்கிறார். மேலும், தார்மீகம், முதலாளித்துவம் குறித்தும் அவர் பல இடங்களில் பேசியுள்ளார். அவர் கடைப்பிடித்த கொள்கைகள் மிகவும் எளிமையானது. யார் வேண்டுமானாலும் அதைப் பின்பற்றலாம் என்பது போலவே இருக்கும்.
இரண்டு முக்கிய ரூல்ஸ்: 94 வயதில் இந்தளவுக்கு ஷார்ப்பாக இருப்பது ரொம்பவே முக்கியம். அவர் சொன்ன முதலீடு சார்ந்த 2 ரூல்களை நாம் எப்போதும் மறக்கவே கூடாது. முதல் ரூல்- நீங்கள் முதலீடு செய்த தொகையை எப்போதும் இழக்காதீர்கள்.. இரண்டாவது ரூல்- முதல் ரூலை எப்போதும் மறக்காதீர்கள். இந்த இரண்டும் தான் முதலீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.
ஏனென்றால் நீங்கள் போட்ட பணத்தில் 50%ஐ நஷ்டமாக்கினீர்கள் என்றால்.. அதன் பிறகு 100% லாபம் வந்தால் மட்டுமே போட்ட பணத்தை வெளியே எடுக்க முடியும்" என்று கூறினார். அதாவது முதலீடு செய்யும் போது எவ்வளவு பணத்தைச் சம்பாதிக்கிறோம் என்பதை விட போட்ட பணத்தை இழக்கக்கூடாது என்பதே முக்கியம் என்கிறார். அதைச் சரியாகச் செய்து வந்தாலே போதும் என்பதே அவரது கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications