மார்ச்சில் நடக்கும்னு நினைச்சது.. 60 நாட்களுக்கு முன்பே நடந்துடுச்சு! ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்
சென்னை: இன்று ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 67 பைசா குறைந்து 87.29 ஆகக் சரிந்து உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் இந்த வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்தார்.

சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதலிடம் வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா 3.2 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் ஒன்பதாவது இடத்தில்தான் இந்தியா உள்ளது. இதனால் அமெரிக்கா கூடுதல் வரி விதித்த நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியா இல்லை.
ஆனால் விரைவில் இந்தியா மீதும் டிரம்ப் வரி விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்ளுவோம் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வர்த்தக போர் அச்சம்:
இந்த வர்த்தக போர் அச்சத்திற்கு இடையே இன்று ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 67 பைசா குறைந்து 87.29 ஆகக் சரிந்து உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், யூனியன் பட்ஜெட்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட உடன் ரூபாய் மதிப்பு 87ஐ எட்டி உள்ளது. இந்த தருணம் மார்ச் மாத இறுதியில் வரும் என்று நினைத்தேன். ஆனால் 60 நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டது. அம்ரித் காலம் தொடங்கிவிட்டது, என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரித்துள்ளார்.
சரியும் ரூபாய் மதிப்பு:
டாலரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, டிரம்ப் வருகைக்கு பின் டாலர் பலம் மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது, அதேபோல் எண்ணெய் வர்த்தகமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது.
வெள்ளியன்று, அமெரிக்க நாணயத்திற்கு எதிராக ரூபாயின் மதிப்பு 86.62 ஆக இருந்தது. திங்கள் கிழமை இது 87ஐ தாண்டி உள்ளது. விரைவில் ரூபாயின் மதிப்பு 90 ஐ அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பொருட்களின் விலை இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் உயரும். பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12-13 வருடங்களுக்கு முன் ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 50-60 அளவிலேயே இருந்தது. அதன் மதிப்பு தொடர்ந்து சரிவது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மாறி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications