நான் முதல்வரிடம் பேசி சமாளித்துவிடுவேன்.. கொறடாதான் விளக்க வேண்டும் - அன்பில் மகேஷ்
சென்னை: மயிலாடுதுறை திருமண மண்டப திறப்பு விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காமெடியாக பேசிய விஷயம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. முதல் கட்டமாக சென்னையில் இருக்கும் பீச்கள் மூடப்பட்டு இருக்கின்றன. தியேட்டர்களில் 50 சதவிகித கூட்டம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருக்கிறது .
கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தும் போது 50 சதவிகித பேர் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை திருமண மண்டப திறப்பு விழா ஒன்று அதிக கூட்டத்தோடு நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.

கூட்டம்
இந்த கூட்டத்தில் பேசிய அரசு தலைமை கொறடா கோவி.செழியன், இந்த கூட்டத்தில் மக்கள் பலர் கூடி உள்ளனர். மிகப்பெரிய அளவில் கூட்டம் நடக்கிறது. மண்டபம் திறப்பு விழாவிற்கு அதிக பேர் வந்து கிட்டத்தட்ட மாநாடு போல இந்த கூட்டம் நடக்கிறது.

மயிலாடுதுறை கூட்டம்
கொரோனா விதிகளை இங்கு மக்கள் கடைபிடிக்க வேண்டும். கூட்டமாக இருந்தாலும் மக்கள் சமூக இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் திமுகவின் உள்ளூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேச்சு
இதையடுத்து பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசு நிறைய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை விதித்து இருக்கிறது. இருப்பினும் இந்த கூட்டத்தில் மக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு இருக்கிறீர்கள். கூட்டம் அதிகமாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அன்பில் மகேஷ்
இதை பற்றி கண்டிப்பாக முதல்வர் என்னிடம் கேள்வி கேட்பார். எனவே நான் இது கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என்று கூறி தப்பித்துக்கொள்வேன். தமிழ்நாட்டில் மயிலாடுதுறை வேக்சின் போடுவதில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

மயிலாடுதுறை அன்பில் மகேஷ்
எனவே இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறி நான் தப்பித்துக்கொள்வேன். ஆனால் அரசு கொறடாதான் இது மாநாடு போல நடப்பதாக கூறினார். ஒருவேளை முதல்வர் கேட்டால் அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அன்பில் மகேஷ் கிண்டலாக சிரித்தபடி குறிப்பிட்டார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications