"ஓகே ஓகேவில்" உதயநிதியின் ரீல் லவ்வுக்கு சந்தானம்.. ரியல் லவ்வுக்கு "பார்த்தாவான" அன்பில் மகேஷ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருத்திகாவை எனக்கு அறிமுகப்படுத்துவதற்காக உதயநிதி ஸ்டாலின் சாக்லேட்டுடன் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்த கோயிலுக்கே அழைத்து சென்றார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பழைய நினைவுகளை அசைபோட்டுள்ளார்.

உதயநிதியும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரது குடும்பமும் அரசியல் குடும்பம், இருவரும் தாத்தாக்களும், அப்பாக்களும் அரசியல்வாதிகள். அவர்களை போல் பொது சேவை செய்யும் நோக்கில் தோஸ்துகளான இருவருமே அரசியல்வாதியாக உள்ளனர்.

இந்த நட்பை அன்பில் அமைச்சராக பதவியேற்கும் போதே பார்த்திருப்போம். கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்ற போது ஆனந்த கண்ணீரில் உதயநிதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சட்டசபையில் உதயநிதி

சட்டசபையில் உதயநிதி

அது போல் சட்டசபையில் உதயநிதியின் கன்னி பேச்சை அவரது இருக்கைக்கு அருகே சென்று அன்பில் மகேஷ் ரசித்தார். தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மட்டுமே நன்மையை பெறும் நிலையில் தனது நண்பன் உதயநிதியை அமைச்சராக்கினால் ஒரு துறையே நன்மையை பெறும், வளர்ச்சியை பெறும் என அன்பில் மகேஷ் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

ஆனால் அமைச்சர் பதவியை உதயநிதி விரும்பவில்லை. இந்த நிலையில் உதயநிதிக்கும் தனக்குமான இடையே உள்ள நட்பு குறித்து ஒரு ஊடகத்திற்கு அன்பில் மகேஷ் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் உதயநிதி- கிருத்திகா லவ் ஸ்டோரி குறித்தும் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு நாள் உதயநிதி என்னை அழைத்தார். அப்போது உனக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என்றார்.

சாக்லேட்

சாக்லேட்

சரி என நானும் சென்றேன். செல்லும் வழியில் ஒரு கடையில் சாக்லேட் வாங்கிக் கொண்டு கிருத்திகாவின் வீட்டருக்கே இருக்கும் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கிருத்திகா பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பொண்ணுதான்டா என கை நீட்டி என்னிடம் காட்டினார். உடனே வெட்கத்தில் கிருத்திகா பாதியிலேயே டான்ஸை நிறுத்திவிட்டு ஓடி விட்டார்.

Recommended Video

    பூஜை நம்பிக்கையில்ல! ஆனால் ஏன் கலந்துக்குறேன்னு தெரியுமா? Udhayanidhi Stalin கொடுத்த விளக்கம் *Politics
    திருநங்கைகள்

    திருநங்கைகள்

    எனக்கு கிடைத்த நல்ல தங்கை. அப்போதிலிருந்தே திருநங்கைகள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர். உதயநிதிக்கு ஏற்ற ஜோடி கிருத்திகா. ஆனால் உதயநிதியின் முதல் மனைவி நான்தான் என கூறுவார்கள். இதன் தொடக்கப் புள்ளி என்ன என எனக்கு தெரியவில்லை என்றார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகாவை காதலிக்க நம்ம பார்த்தாவை (சந்தானம்) துணைக்கு அழைத்து செல்வார் உதயநிதி. அது போல் நிஜ வாழ்க்கையில் பார்த்தாவாக இருந்த அன்பில் மகேஷ்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+