"இன்னும் முடியல.. NDAவில் சீக்கிரமே புதிய கட்சிகள் வர போகுது.." ட்விஸ்ட் கொடுத்த அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் திமுக ஆட்சி மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தேர்தலின்போது அது தெரியும் என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சில நாட்களில் என்டிஏ கூட்டணியில் வேறு சில கட்சிகளும் வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துவிட்ட நிலையில், தலைவர்களின் விமர்சனங்களும் கூர்மையாகி வருகிறது. இதற்கிடையே திமுக கூட்டணி குழப்பம் நிறைந்ததாக இருப்பதாகவும் காங்கிரஸ் ஒரு பக்கம் செல்வதாகவும் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி ஒற்றை இலக்கத்திலேயே வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

Anbumani about NDA alliance Few more parties are going to join in ADMK alliance says PMK Chief

அன்புமணி

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "அரசு ஊழியர்கள் போராட்டம், இணைப் பேராசிரியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம் எனத் தினசரி போராட்டங்கள் தான் நடக்கிறது. ஸ்டாலின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தோம்.. ஆனால், அவர் எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்றே அனைவரும் சொல்கிறார்கள். தமிழகத்தில் ஊழல் நிறைந்த, மக்கள் விரோத ஆட்சி தான் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் எல்லாக் கிராமங்களிலும் இன்று போதைப் பொருட்கள் விற்கிறார்கள். இதுதான் திமுக அரசின் மிகப் பெரிய தோல்வி. கஞ்சா மட்டும் இல்லை எல்லா வகையா பொருட்களும் இங்குக் கிடைக்கிறது. நகரங்களில் மட்டும் இல்லை கிராமங்களிலும் போதைப் பொருள் எளிதாகக் கிடைக்கிறது. ஒரு தலைமுறையையே இது நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

போதைப்பொருள்

ஸ்டாலின் தந்தை கருணாநிதி தான் இங்கு மீண்டும் மதுவைக் கொண்டு வந்தார். 3 தலைமுறைகள் மதுவினால் நாசமடைந்தது. இப்போது ஸ்டாலின் இந்தத் தலைமுறையைப் போதைப் பொருட்களால் நாசப்படுத்திவிட்டார். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை இன்று கோபத்தில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே கிடையாது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது. இதையெல்லாம் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

12 லட்சம் கோடி வந்துவிட்டது. 35 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துவிட்டது எனப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். திமுக அரசு உண்மையில் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்கள் திமுக ஆட்சி மீது கொதித்துப் போய் கோபத்தில் இருக்கிறார்கள்.

புதிய கட்சிகள் வரும்

மறுபுறம் எங்கள் கூட்டணியில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உணர்வுப்பூர்வமாக இருக்கிறோம். ஆனால், திமுக கூட்டணி குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு பக்கம் காங்கிரஸ்.. ஒரு பக்கம் விசிக.. ஒரு பக்கம் வைகோ என பிச்சுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், எங்கள் கூட்டணியில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. சொல்லப் போனால் இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்குள் வரவுள்ளது.

இந்தத் தேர்தல் என்பது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடைபெறும் தேர்தல். இந்தத் தேர்தல் எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். தமிழ்நாடு மக்கள் எப்போது தான் தேர்தல் வரும் எனக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் வந்தால் எங்களுக்குச் சாதகமாக ஒரு பெரிய அலையே அடிக்கும். அது திமுகவுக்கு எதிரான பேரலையாக இருக்கும். திமுக ஆட்சி அகற்றப்படும். எங்கள் கூட்டணி 200+ இடங்களில் வெல்லும். திமுக ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளைப் பெறும்!

திமுக vs அதிமுக

2021 தேர்தலில் கூட அதிமுக அப்போது 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போதே திமுக வெறும் 125 தொகுதியில் தான் வெற்றி பெற்றது. மீதி உள்ள எட்டுத் தொகுதிகள் அவர்களின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் இவர்கள் சின்னத்திலே போட்டியிட்டார்கள். 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்கு பிறகே திமுகவால் அவ்வளவு தான் வெல்ல முடிந்தது. மாநிலத்தில் மிக மோசமான முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். சாதி வாரிக் கணக்கெடுப்பைக் கூட எடுக்க மறுக்கிறார்கள். கர்நாடகா, தெலுங்கானா சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்துவிட்டது. ஆனால், தமிழகம் மட்டும் அறிவிக்கவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+