திமுகவிடம் பெட்டி வாங்கிய ஜிகே மணி! எல்லா பிரச்சினைக்கும் திமுக தான் காரணம்! பொங்கிய அன்புமணி
சென்னை: ஐயாவிடம்( ராமதாஸ்) உங்களை அப்படி சொல்லிவிட்டார், இப்படி செய்துவிட்டார் என்று என்னைப் பற்றி தவறான விஷயங்களை எல்லாம் சொல்லி ஐயாவுக்கும் எனக்கும் பகையை உருவாக்கியது ஜிகே மணி தான் எனவும், ஜிகே மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை மகாபலிபுரத்தில் தமிழகம் முழுவதுமுள்ள பாமக பொறுப்பாளர்கள் கூட்டம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் பேசிய அன்புமணி பாமகவில் இப்போது நடக்கும் அனைத்து விவகாரங்களுக்கும் ஜிகே மணி தான் காரணம் என குற்றம்சாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," இது அன்புமணி ராமதாஸின் காலம் பழைய மன நிலையில் மக்கள் கிடையாது அனைத்து தரப்பு மக்களும் அன்புமணியை ஏற்று கொண்டிருக்கிறார்கள். பாமக நிர்வாகிகள் எந்த தரப்பு மக்களையும் சந்தித்து வாக்கு கேட்பதை தவிர்க்காதீர்கள்.
அன்புமணி விமர்சனம்
திமுக சூழ்ச்சி செய்து வன்னியர்களையும், பட்டியலின மக்களையும் ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். கேடுகெட்ட திமுக இரண்டு சமுதாயங்களுக்கு இடையில் சூழ்ச்சி செய்து வருகிறார்கள்.. இது அனைவருக்கும் தெரியும். சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் தற்போது அய்யாவை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப் போவது கிடையாது. நானும் இது கடந்து போகும் இது கடந்து போகும் என்று எவ்வளவு தான் தாங்கிக் கொண்டு செல்வது. எவ்வளவு அசிங்கப்பட்டுள்ளேன். அவமானப்பட்டுள்ளேன்.
ஜிகே மணி மீது குற்றச்சாட்டு
தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றேன். ஏன் எதற்காக உங்களுக்காகத்தான். இந்த கட்சிக்காக தான் இந்த சமுதாயத்திற்காக தான். இந்த துரோகிகள் எல்லாம் சேர்ந்து ஐயாவை என்ன மாதிரியான மனநோக்கில் கொண்டு வந்து
விட்டார்கள். இந்த துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப் போவது கிடையாது. இன்னும் மூன்று மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக் கொண்டிருங்கள். டெல்லியில் 30 பேர் கலந்து கொண்டு 3000 பேர் கலந்து கொண்டதாக அய்யாவிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள்.
ராமதாஸ்
நாம் நடத்தும் கூட்டங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக அய்யாவிடம் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள். என்னை தலைவராக்கிய அடுத்த நாளிலிருந்து ஜிகே மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார். சூழ்ச்சி செய்து அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜிகே மணி தான். ஜிகே மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி
இல்லாத நபர்கள். ஐயாவிடம் உங்களை அப்படி சொல்லிவிட்டார் இப்படி செய்துவிட்டார் என்று என்னைப் பற்றி தவறான விஷயங்களை எல்லாம் சொல்லி ஐயாவுக்கும் எனக்கும் பகையை உருவாக்கியது ஜிகே மணி தான்.
திமுக சூழ்ச்சி
குழந்தை மாதிரி உள்ள ஐயாவை ஜிகே மணி உள்ளிட்டோர் ஏமாற்றி வருகிறார்கள். டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது ஆனால் வெற்றி பெற்றதாக ஐயாவிடம் தவறான தகவல்களை சொல்லி ஐயாவை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களுடைய செயல் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பின்னால் இருப்பது திமுக தான் நூறு விழுக்காடு காரணம். திமுக தான். திமுகவின் கைக்கூலிகள் தான் இவர்கள்.
பாமக
இவர்களெல்லாம் யார் யாரிடம் எவ்வளவு (பணம்) வாங்கி இருக்கிறார்கள் என்ற அனைத்து விவரங்களும் என்னிடம் இருக்கிறது. ஊடகங்களில் தினசரி பொய்யைச் சொல்லி திசை திருப்பி வருகிறார்கள். அருள், ஜி கே மணி போன்றோர் செய்யும் பொய்களை பாமகவினர் நம்ப வேண்டாம். அவர்களுக்கு பதில் சொல்லும் பெயரில் நீங்கள் பதிவுகளை போடாதீர் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications