சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன? கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்
சென்னை : சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமாகிய அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் உழவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்குவதற்கு பதிலாக அச்சத்தை அதிகரித்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமே இந்த அச்சத்தைப் போக்க முடியும் எனக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், சென்னை படப்பையிலிருந்து சேலத்திற்கு எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டம் எந்த நேரமும் மீண்டும் தொடங்கப்படும், அதற்காக தங்களின் நிலங்கள் மீண்டும் கையகப்படுத்தப்படும் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது 8 வழிச் சாலை அமையவுள்ள 6 மாவட்டங்களின் உழவர்களிடம் ஏற்பட்டிருக்கிறதுஎன கூறியுள்ளார்.

சென்னை சேலம் 8 வழிச்சாலை
தருமபுரியில் கடந்த டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உழவர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், இது தொடர்பான தங்களின் ஐயத்தை வெளிப்படுத்திய உழவர்கள், 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரி மனு அளித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் வ.முகுந்தன் அனுப்பியுள்ள கடிதம் தான் புதிய ஐயங்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அன்புமணி, ஏற்கனவே எட்டு வழிச் சாலைக்காக நில எடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டபோது தனியாரின் பட்டா நிலங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பிரிவு செய்து பெயர் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை எனவும், தனியார் நிலங்கள் அந்தந்த பட்டாதாரர்கள் பெயரிலேயே உள்ளதுஎனவே பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை பாகப் பிரிவினை செய்யவோ, பத்திரம் செய்யவோ, கடன் உதவி பெறவோ எந்தத் தடையும் இல்லை" என்று அந்தக் கடிதத்தில் மாவட்ட வருவாய் அலுவலகர் குறிப்பிட்டிருந்தார் என சுட்டிக் காட்டியுள்ளார்.

புதிய சர்ச்சை
இது அனைவரும் அறிந்த ஒன்று தான் எனவும், ஆனால்,''தர்மபுரி மாவடத்தில் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது'' என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என தனது அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் சுமார் 7000 உழவர் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் என்பதால் தான் அந்தத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்படும் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்த நான், அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாகவும் கூறியுள்ளார்.

அரசுக்கு கோரிக்கை
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது'' என்று தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருக்கத் தேவையில்லை எனவும், மாறாக, 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படாது; அதனால் உழவர்கள் எந்த வகையிலும் அச்சப்படத் தேவையில்லை என்று உறுதியாக கூறியிருக்கலாம் என கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டு உழவர்களிடம் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும் எனவும், அதற்காக தமிழ்நாட்டில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும், மாறாக 8 வழிச்சாலை திட்டம் திணிக்கப்பட்டால் அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டப்போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications