குலசாமியான ராமதாஸ்.. குறுக்கே நிற்கும் பூசாரி! போட்டுடைத்த அன்புமணி! தைலாபுரத்தில் யாரந்த 3ஆம் நபர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று நிறைவு அடைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தந்தை குறித்து பேசி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். ராமதாஸ் குலசாமி என்றும் ஆனால் சில பூசாரிகள் தான் பிரச்சனை எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து யார் அந்த பூசாரி? என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது.

தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியர் சங்கமாக இருந்த இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக தேர்தல் அரசியலுக்கு மாற்றினார் ராமதாஸ். தொடர்ந்து தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியதோடு, கட்சியின் தலைவராகவும் நியமித்தார்.

தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாமக 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பாதைக்கு திரும்பியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றனர். தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் பாமகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது.

Anbumani Ramadoss Blames

பாமக அரசியல்

இந்த நிலையில் 2021 தேர்தலுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் வெடித்தது. வன்னியர் சங்க மாநாட்டின் மூலம் மிகப்பெரிய அளவில் செல்வாக்கை காட்ட திட்டமிட்டு இருந்த நிலையில், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். இதனால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கட்சியின் எதிர்காலம் அன்புமணி தான் என நினைத்திருந்த வேளையில் ராமதாஸின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது.

அன்புமணி

அதற்குப் பிறகு அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கம் செய்வது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது என அதிரடி காட்டினார் ராமதாஸ். மேலும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். ஆனால் அவை குறித்து அன்புமணி எதுவுமே பேசவில்லை. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார் அன்புமணி. அதற்கு தடை கேட்டு ராமதாஸ் நீதிமன்றம் சென்ற நிலையில், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ராமதாஸ்

வழக்கம்போல் மேடையின் நடுவே ராமதாஸுக்கு இருக்கை அமைத்திருந்தார் அன்புமணி. தொடர்ந்து பேசிய அவர்," மாநாட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்பு கிடைத்ததும் எனக்கு மகிழ்ச்சி இல்லை. கஷ்டமாகத்தான் உணர்ந்தேன். யாரை எதிர்த்து இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறோம் என கவலை வந்தது. அதே நேரத்தில் ராமதாஸ் தான் நமக்கு குலசாமி. அவ்வப்போது சாமி கோபித்துக் கொள்ளும். நாம் நேர்த்திக்கடன் செய்து அதனை சமாளித்து விடலாம். ஆனால் இங்கே பூசாரிகள் தான் பிரச்சனை. ராமதாசுடன் இருக்கும் சிலர் அவரை தூண்டி விட்டு வருகின்றனர்" என குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பாமக பொதுக்குழு கூட்டம்

முதன் முறையாக ராமதாஸ் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு அன்புமணி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரச்சனைக்கு யார் தான் மூல காரணம் என விசாரித்த போது பாட்டாளி மக்கள் கட்சியினர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். "ராமதாஸ் குடும்பத்தை பொறுத்தவரை அன்புமணி தலைவராக தொடர வேண்டும் என விரும்புகின்றனர். கட்சியின் எதிர்காலம் அவர் தான் என்பதிலும் தெளிவாக இருக்கின்றனர். ஆனால் கட்சியில் ஏற்கனவே பதவி வகித்து, பதவியை இழந்தவர்கள், வேறு பதவிக்கு மாற்றப்பட்டவர்கள் அன்புமணியை வெறுக்கின்றனர்.

பூசாரி விவகாரம்

இதனால் ராமதாஸின் வயதான சூழலை பயன்படுத்தி அவரை பேட்டி கொடுக்க வைக்கின்றனர். கடந்த காலங்களில் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேப்பரை வைத்து படிக்க மாட்டார். ஆனால் தற்போது யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து படிப்பதை பார்த்தாலே என்ன நடக்கிறது என்பது தெரிந்து விடும். மேலும் தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் ராமதாஸ் குடும்பத்தை சேராத ஒரு பெண் கட்சி விஷயத்தில் தலையிடுவது அன்புமணி தரப்புக்கு பிடிக்கவில்லை.

அரசியல்

அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை .அதனால் தான் ராமதாசை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலை அன்புமணிக்கு ஏற்பட்டது. பலமுறை அன்புமணி ராமதாஸ் ராமதாசை சந்தித்து பேசினார். காலையில் சரி என்பவர் மாலையில் ஏதாவது ஒரு அறிக்கை பேட்டி என கொடுத்து குழப்பி விடுகிறார். இவற்றிற்கெல்லாம் அந்த 'பூசாரி' தான் காரணம். நிச்சயம் அவர்கள் ராமதாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பது மட்டும் உறுதி" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+