சென்னை மாநகராட்சியின் தீர்மானம்.. பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரை! அன்புமணி கண்டனம்
சென்னை: அரங்குகளின் வாடகையை உயர்த்துவது குறித்து சமீபத்தில் சென்னை மாநகராட்சி தீர்மானம் ஒன்றை இயற்றியிருந்தது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். வாடகையை உயர்த்துவதன் மூலம் பொது நிகழ்ச்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும் என்றும் அவர்கூறியுள்ளார்.
சென்னையில் 595 பூங்கா, 9 கால்பந்து மைதானம், 2 அரங்குகளை தனியார்மயமாக்க மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி செயற்கை புல் தரைகள் கொண்ட 9 கால்பந்து மைதனங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு அணிகள் (5+5) ஒரு மணி நேரம் விளையாடுவதற்கு ரூ.1200 கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், செனாய் நகர் அம்மா அரங்கத்தின் வாடகை ரூ.3.40 லட்சத்திலிருந்து ரூ.5.43 லட்சமாகவும், தி. நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தின் வாடகை ரூ.20,650 லிருந்து ரூ.50,000 ஆகவும் உயர்த்தி தனியாருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இதிலிருந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.2.22 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மாநகராட்சியின் இந்த தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பையடுத்து விளயைாட்டு அரங்குகளை தனியாருக்கு விடும் தீர்மானத்த மாநகராட்சி திரும்ப பெற்றது. ஆனால் பொது நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்குகளை தனியாருக்கு விடப்பட்டது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட்டவில்லை. இந்நிலையில்தான், சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை
மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து தனது x தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு மாநகராட்சி திரும்பப் பெற்றிருக்கிறது. பட்ட பிறகாவது சென்னை மாநகராட்சி அதன் முடிவை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், மாநகராட்சியின் முடிவு முழுமையானதாக இல்லை.
கால்பந்து திடல்கள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் மட்டும் போதாது. ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான டென்னிஸ் திடல், பேட்மிண்டன் திடல் , ஸ்கேட்டிங் மைதானம் , டேபிள் டென்னிஸ் மைதானங்கள் போன்றவையும் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும்.
விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை விட அதிர்ச்சியளிக்கும் செயல், தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவை தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது தான். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் தியாகராயர் அரங்கத்தை 24 மணி நேரம் பயன்படுத்துவதற்கான வாடகை இப்போதுள்ள ரூ.20,650-லிருந்து ரூ.59,000 ஆக உயர்த்தப்படும். அம்மா அரங்கத்தின் வாடகை ரூ.3.40 லட்சத்திலிருந்து ரூ.5.40 லட்சமாக உயர்த்தப்படும். எளிய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் அரங்குகளின் வாடகை மும்மடங்கு அளவுக்கு உயர்த்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தியாகராயர் அரங்கில் சில ஆயிரம் ரூபாய் செலவில் 3 மணி நேரத்திற்கான நூல் வெளியீடு உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளை எளிய மனிதர்களாலும் நடத்தி விட முடியும். மாறாக, ரூ.59,000 செலுத்தி தான் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எனவே, எளிய மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications