2026-ஆம் ஆண்டு பாமக ஆட்சி! திண்ணைப் பிரச்சாரத்தை கையிலெடுப்போம்! அன்புமணி ராமதாஸ் பேச்சு!
சென்னை: 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் வகையில் கட்சியில் உள்ள இளைஞர்கள் திண்ணைப் பிரச்சாரத்தை இப்போதே தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மேலும், பாமக 2.0 என்ற புதிய திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளதாகவும், 2026 -ல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாமக 2.0 திட்டம்
இதற்காக PMK 2.0 என்ற புதிய திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றார். நிழல் நிதிநிலை அறிக்கை, நிழல் வேளாண் அறிக்கை போன்றவற்றை நிஜத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், தமிழகத்தில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தங்களிடம் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் இருப்பதாக பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தார்.

வன்னியர் இட ஒதுக்கீடு
உச்சநீதிமன்ற தீர்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க தேவையான தரவுகளோடு தமிழக அரசு வழங்கலாம் என தெரிவித்திருப்பதாகவும், தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக நிச்சயம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் என தெரிவித்தார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல், LPG, வீட்டு வரி ஆகிய விலைவாசி 145% உயர்ந்திருப்பதாகவும், உடனடியாக விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தால் இனிவரும் காலங்களில் தமிழகம் மிகப் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவும், அதை தடுக்க பாலாற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பணை, நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என பேசினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications