வெளியான பாமக வேட்பாளர்கள் பட்டியல்! தருமபுரியில் அன்புமணி பெயர் மிஸ்ஸிங்! ஏன் என்னாச்சு?
சென்னை: தமிழக மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனி கூட்டணியாகவும் நாம் தமிழர் தனித்தும் போட்டியிடுகிறது.

பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தது. இதையடுத்து பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர் பட்டியலை பாமக இன்று அறிவித்தது.
பாமக வேட்பாளர்கள் விவரம்: திண்டுக்கல் - திலகபாமா அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார் கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் மயிலாடுதுறை - ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார் தருமபுரி - அரசாங்கம் சேலம் - ந. அண்ணாதுரை விழுப்புரம் - முரளி சங்கர்
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்த மக்களவைத் தொகுதியில் தருமபுரியில் பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இதனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராவும் அன்புமணி இருந்தார். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு தருமபுரி லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிட்டு வென்றார். இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அவர் திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து 2019 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக அன்புமணி தேர்வு செய்யப்பட்டு தற்போது பதவியில் இருந்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் 2025 இல் முடிவடையும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications