இனி மாஸ்டர் அன்புமணி ராமதாஸ்.. கெளரவ பிளாக் பெல்ட் பெற்ற பாமக தலைவர்.. உற்சாகம் அடைந்த செளமியா!
சென்னை: சென்னையில் உலக அளவிலான கலை கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணிக்கு கெளரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனை அன்புமணி ராமதாஸ் கராத்தே உடையுடன் பங்கேற்று பெற்றுக் கொண்டார். இதன் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த 7 மாதங்களாக பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையில் மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதே தவறு என்றும், அவரின் பாமக தலைவராக்கியது 2வது தவறும் என்று ராமதாஸ் கொந்தளித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் செயல் தலைவர் பதவியை மகள் காந்திமதிக்கும் ராமதாஸ் வழங்கி இருக்கிறார்.

மறுபக்கம் அன்புமணி, உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் வட மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதியாக மக்களை சந்தித்து வருகிறார். பாமகவை வலுப்படுத்த அன்புமணி சில முயற்சிகளை மேற்கொண்டாலும், பாமகவின் உட்கட்சி மோதல் பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கிறது.
ஆனால் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இதனிடையே தமிழக பாஜக பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டாவுடன் அன்புமணி சந்திப்பு நடத்தி, கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார். பீகார் தேர்தலுக்கு பின் தமிழ்நாடு வரும் அமித்ஷா, பாமக உடனான கூட்டணியை இறுதி செய்வார் என்று தெரிகிறது.
இம்முறை வட மாவட்டங்களில் சில தொகுதிகளை குறித்து பாஜக காய்களை நகர்த்துவதால், பாமகவின் ஆதரவு அக்கட்சிக்கு அவசியமானதாக இருக்கிறது. இந்த நிலையில் அன்புமணியின் வீட்டில் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அன்புமணியின் 2வது மகள் சங்கமித்ராவுக்கு மகள் பிறந்துள்ளார். இதனால் அவரது குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உலக அளவிலான தற்காப்புக் கலை கூட்டமைப்பின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் செளமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது பாமக தலைவர் அன்புமணிக்கு கெளரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. இதனை கராத்தே ஆடை அணிந்து அன்புமணி பெற்றுக் கொண்டார். இதனை பார்த்த செளமியா அன்புமணி உற்சாகம் அடைந்தார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications