கடுமையான பாதிப்பு- மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: வடகிழக்கு பருவமழையால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும் அதற்கான அளவீடு ஏதேனும் இருக்கிறதா என ஆளுநர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆளுநர் கேள்வி
இந்த நிலையில் ஆளுநர் கேள்விக்கு அரசு தரப்பில் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட இன்றே கடைசி நாளாகும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில் தொழிற்சாலைகளில் 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு கையெழுத்திட இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் இன்றைக்குள் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. எனினும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல. தமிழகத்தில் ஆளுநர் செய்யாமல் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநரும் தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும்.

82 பேர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம். ராகுல் காந்தியின் நடைப்பயணம் பெரிய எதிரொலியை ஏற்படுத்தி, பாஜகவிற்கு பின்னடைவை உண்டாக்கும் என தெரிவித்துள்ளார். அது போல் சீர்காழி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அன்புமணி பார்வையிட்டார்.

ரூ 30 ஆயிரம்
ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம், குடும்பத்திற்கு ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் மட்டும் வாய்க்கால்கள், வடிகால்களை தூர்வாருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். அதற்கேற்ற வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமைப்போம் என அன்புமணி தெரிவித்திருந்தார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications