Anbumani: என் வாயில் இருந்து வரும் "அந்த" வார்த்தை! கஷ்டமாக இருக்கு! அன்புமணி உருக்கம்!
சென்னை: என் வாயில் இருந்து அந்த வார்த்தை வருகிறது, அந்த வார்த்தையை நாம் திமுகவை பார்த்துதான் கூறுவோம். என்ன செய்வது? ராமதாஸுக்கு வயது மூப்பால் மனநிலை மாறிவிட்டது. அவர் யார் எது சொன்னாலும் நம்புகிறார் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் கூறியிருப்பதாவது: திமுக மீடியாக்கள் மூலம் ராமதாஸிடம் நாள்தோறும் பொய்களை சொல்லி சொல்லி அவரது மனதை மாற்றிவிட்டனர். இந்த கன்றாவியை எல்லாம் யாரும் நம்பாதீங்கள்.
அதை நம்பி அதற்கு ஒரு பதிவை போட்டு பதில் சொல்லிக் கொண்டு இதெல்லாம் வேண்டாம். இன்னும் ஒரு 3 மாதங்களில் தேர்தல் வருகிறது. இதற்கு நீங்கள் தயாராகுங்கள். நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
கட்சி, சின்னமும் நம்மிடம்தான் இருக்கிறது. இப்படி சொல்றாங்க, அப்படி சொல்றாங்கன்னு எதையும் நம்பாதீங்கள், இவங்களுக்கு வேற வழியில்லை, என் வாயில் இருந்து இவங்க, அவங்கன்னு பேசுறது எனக்கு உண்மையிலேயே கஷ்டமாக இருக்கிறது.
அவங்க என நாம் யாரையும் சொல்வோம், திமுகவைத்தான் சொல்வோம். திமுக எதிரி, ராமதாஸை சுற்றி இருப்போர் துரோகி. நம்மை போல் அவர்களால் (ராமதாஸ் தரப்பு) கூட்டம் கூட்ட முடியுமா, நிர்வாகிகள் இருக்கிறார்களா?
ராமதாஸுக்கு வயது மூப்பால் மனநிலை மாறிவிட்டது. இதனால் அவர்கள் சொல்லும் பொய்களை நம்புகிறார். நம் நிர்வாகிகளை அடித்து, மண்டையை உடைத்துள்ளனர் அருள் தரப்பினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் அவர்களை கைது செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம், திமுக அவர்களுக்கு ஆதரவு! டெல்லியில் 3000 பேர் போராட்டம் நடத்தியதாக ராமதாஸ் சொல்லியிருந்தார்.
வரும் தேர்தலில் திமுக தோல்வி அடைய வேண்டும். இதை நீங்கள் அத்தனை பேரும் உறுதி செய்ய வேண்டும். தைலாபுரத்தை திமுக அபகரித்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார். பொதுவாக மற்ற கட்சியினரைத்தான் பேச்சு வழக்கில் அவங்க, இவங்க என சொல்வார்கள். ஆனால் பாமக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் சொந்த கட்சியினரையே அவங்க, இவங்க என சொல்லும் நிலை வந்துவிட்டதாக அன்புமணி வருந்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணிதான் பாமக தலைவர் என்றும் அவருக்குத்தான் மாம்பழச் சின்னம் என்றும் கூறிவிட்டது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தைலாபுரம் தோட்டத்தில் கூறியிருந்ததாவது: சொந்த தந்தையையே எதிர்க்கும் இப்படியொரு தலைவர் தமிழ்நாட்டில் பிறந்துள்ளாரே என்று பேச தொடங்கியுள்ளனர். டெல்லியில் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளோம். பாமகவை நான் உருவாக்கினேன். கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும்.
என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. புதிய கட்சியை தொடங்கியோ அல்லது வேறு ஒரு கட்சியிலோ இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அன்புமணி பொய் பேசி கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு உனக்கு எதற்கு கட்சி என்று தெரிவித்திருந்தார்.
டெல்லியில் மிக பெரிய போராட்டம் நடத்தியுள்ளோம் என ராமதாஸ் கூறியிருக்கும் நிலையில் அன்றைய தினம் 100 பேரை கூட பாமகவால் கூட்ட முடியவில்லை என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications