அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்! தடை கொண்டு வருவது எப்போது? கேள்வி கேட்கும் அன்புமணி ராமதாஸ்!
சென்னை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்ற அறியாமையில் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் ரம்மி, ட்ரேடிங்க் ஆப்கள் தான் இந்த அவலநிலைக்கு காரணம். இதனையடுத்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளால் தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த தடை மீண்டும் விலக்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை
இதனையடுத்து தற்போது கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், காவலர்கள், தொழிலபதிபர்கள் தறொலை செய்து வருகின்றனர். இதனையடுத்து ஆன்லைன் தடை குறித்து தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் நீதிபதி சந்துரு தலைமையிலான அந்த குழு விரைவில் அறிக்கை தக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தற்கொலை
கடந்த சில நாட்களாக ஆன்லைன் ரம்மி குறித்து பேச்சுகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது, மீண்டும் ஒரு ரம்மி தற்கொலை மரணம் நிகழ்ந்திருக்கிறது. சென்னையை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் , பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பெருமாள் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். கடந்த ஆறு மாதம் காலமாக ரம்மி விளையாடி, அதில் அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பாமக அன்புமணி இராமதாஸ்
தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னும் ஓர் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி காரணமாக முதன்முதலாக தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்த போதே அதனை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்து வருபவர்களில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் முக்கிய பங்காற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் பணியை தடை செய்யக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில் சென்னை தற்கொலை சம்பவத்தையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், " சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது!

தடை அவசியம்
ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியம், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும், கோரிக்கைகளும் எவ்வளவு நியாயமானவை என்பதற்கு இந்த நிகழ்வுகளை விட சரியான எடுத்துக்காட்டுகள் தேவையில்லை! ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications