நொறுங்கிடுச்சு! தைலாபுரம் VS பனையூர்.. பாமகவில் உச்சக்கட்ட பரபரப்பு.. இது எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் அப்பா, மகன் ஆகியோருக்கிடையே நடக்கும் மோதல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்ட வாரியாக தைலாபுரம் தோட்டத்துக்கு வரவழைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

அவர்களிடம் கையெழுத்து வேட்டை நடக்கிறது. பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி உத்தரவிட்டதுடன், அந்த தலைவர் பதவியை தானே எடுத்துக்கொண்டார் ராமதாஸ். இந்த அதிரடி முடிவு அன்புமணியின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. உடனே ஆதராவளர்களுடன் ஆலோசனை நடத்திய அன்புமணி, தலைவராக என்னை தேர்ந்தெடுத்தது கட்சியின் பொதுக்குழுதான். அதனால் தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்குத்தான் இருக்கிறது. அதனால் இப்போதும் நான் தான் தலைவர். நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய பாமக நிறுவனர் என்னை ராமதாஸ் மாநாட்டுக்குழு தலைவராக நியமித்திருக்கிறார். அரசியல் களத்தில் அவரின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை, என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டு இருந்தார்.

Anbumani Ramadoss pmk Ramadoss

அன்புமணி கருத்து

அவரின் இந்த ஸ்டேட்மெண்ட் ராமதாசை கோபப்பட வைத்ததன் விளைவுதான், எனக்கே அவன் பாடம் நடத்துகிறானா? பொதுக்குழுதானே முடிவு எடுக்க வேண்டும் ? இதோ எடுக்கிறேன் என்று ஜி.கே.மணி உள்ளிட்ட சீனியர்களிடமும் தனது குடும்பத்தினரிடமும் கோபம் காட்டிய ராமதாஸ், பொதுக்குழு உறுப்பினர்களை தனது தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்திருக்கிறார். அவர்களும் தோட்டத்தில் குவிந்துள்ளனர். கட்சியின் நிறுவனர் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாங்கள் சம்மதிக்கிறோம் என்று எழுதப்பட்ட டாகுமெண்டில் கையெழுத்து போட்டு வருகிறார்கள்.

பனையூர்

இதனை அறிந்த அன்புமணி, சென்னை பனையூர் இல்ல அலுவலகத்தில், தனது ஆதரவாளர்களையும் பொதுக்குழு உறுப்பினர்களையும் வரவழைத்துள்ளார். அவர்களிடம் சீரியஸ் டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து பாமக தரப்பில் விசாரித்தபோது, ''பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 2000 பேர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அன்புமணியின் ஆதரவாளர்கள்தான். அதனால், பொதுக்குழுவை கூட்டி ஓட்டெடுப்பு நடத்தினால் அன்புமணிதான் ஜெயிப்பார். ஏதோ ஒரு வேகத்தில் அப்பா முடிவெடுக்கிறார். அவரோடு மல்லுக்கட்டுணுமா? என்பதுதுதான் அன்புமணியின் யோசனையாக இருக்கிறது. ஆனால், ராமதாஸ் ரொம்பவும் வேகமாக போய்க் கொண்டிருப்பதால் அன்புமணியும் சில முடிவுகளை எடுக்க தீர்மானித்திருக்கிறார்.

பொதுக்குழுவை கூட்டுங்கள்

அதன்படி கட்சியின் பொதுக்குழுவை கூட்டுங்கள்; தலைவர் பதவிக்கு நீங்களும் நானும் போட்டியிடுவோம். யாரை தேர்ந்தெடுக்கிறார்கள் என பார்க்கலாம் என்று அய்யா ராமதாசிடம் சொல்லும் கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார் அன்புமணி. இதற்கிடையே பொதுக்குழுவின் ஆதரவை திரட்டும் வேளையில் அவரது ஆதரவாளர்கள் குதித்துள்ளனர். விரைவில் யார் தலைவர் என்பதில் அப்பாவுக்கும் மகனுக்குமிடையே பொதுக்குழுவில் போட்டி நடக்கும்'' என்கிறார்கள் அன்புமணியின் ஆதரவாளர்கள். இதற்கிடையே, ராமதாசின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், மே 11-ல் நடக்கவிருக்கும் சித்திரை திருவிழாவை பிரமாண்டமாக நடத்தி முடிக்கிற வரையில் அமைதியாக இருக்கலாம் என்றும் ராமதாசிடம் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டவர்கள் சமாதானப் படுத்தியுள்ளனர். ஆனால், அதை ஏற்க மறுத்த ராமதாஸ், சமாதானம் என்ற பேச்சை எடுத்துக்கொண்டு இங்கே வரக்கூடாது என அவர்களை எச்சரிக்கை செய்திருக்கிறார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+