சோதித்த ராமதாஸ்.. சாதித்த அன்புமணி! டெல்லியில் கிடைத்த ’க்ரீன்’ சிக்னல்! முடிவுக்கு வருதாம் மோதல்!
சென்னை: டெல்லி பயணம் மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை திரும்பி இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியில் முழு அதிகாரம் தனக்கு தான் இருக்கிறது என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கும் நிலையில் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் அன்புமணி ராமதாசை போலவே, ராமதாசும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழக அரசியல் கட்சிகளில் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியர் சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக உருப்பெற்றது. அந்த கட்சியை உருவாக்கிய ராமதாஸ் தற்போது அதே கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறார்.
கட்சியின் தலைவராக நீண்ட காலமாக இருந்த ஜிகே மணியை நீக்கிவிட்டு தலைவராக தனது மகன் அன்புமணி ராமதாசை நியமனம் செய்தார். தொடர்ந்து கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அன்புமணி ராமதாஸ் இடம்தான் இருந்தது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வந்த நிலையில் அதற்கு முன்னோட்டமாக வன்னியர் சங்க மாநாடு நடைபெற்றது. அதற்கு முன்னதாக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், வன்னியர் சங்க மாநாட்டு மேடையில் பேசிய கருத்துக்கள் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது/ தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் பாமகவில் அரங்கேறிய நிலையில் தந்தை மகன் இடையே மோதல் வலுத்து வருகிறது.
அன்புமணி ராமதாஸ் பின்னால் நிர்வாகிகள் அனைவரும் அணிவகுத்து நிற்பதால் அவர்களை ஒவ்வொருவராக நீக்கி வருகிறார் ராமதாஸ். அதே நேரத்தில் நான்தான் தலைவர் பொது குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு தான் அதிகாரம் என அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் அவர்கள் பதவியில் தொடர்வதாக அன்புமணி கூறியிருக்கிறார். அதே நேரத்தில் ராமதாஸின் ஆதரவாளர்களும் அன்புமணியால் நீக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலத்தில் முக்கிய புள்ளியாக வளம் வந்த எம்எல்ஏ அருள் இன்று நீக்கப்பட்டார். இது ஒரு புறம் இருக்க திடீரென நேற்று முன்தினம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ். கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவின் படி நான் தான் தலைவர் எனக்குத் தான் அதிகாரம் இருக்கிறது கட்சியினரை நீக்குவது சேர்ப்பது கூட்டணி முடிவு ஆகியவை தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும் என அன்புமணி முறையிட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக சில ஆவணங்களை அவர் சமர்ப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு அன்புமணி சென்னை திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸுக்கு சாதகமான நிகழ்வுகள் தான் பாமகவில் அரங்கேறும் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் இருக்கும் என்கின்றனர் அக்கட்சியினர்.
இது ஒருபுறம் இருக்க அன்புமணி போட்டியாக ராமதாஸ் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி இருக்கும் நிலையில் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் கூட்டம் நடத்தலாம் என சொல்லப்படுகிறது. வரும் பத்தாம் தேதி கும்பகோணத்தில் முதல் கூட்டம் நடைபெறும் என கூறுகின்றனர் ராமதாஸ் ஆதரவாளர்கள். அதே நேரத்தில் தந்தை மகனை சமாதானப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. விரைவில் பிரச்சனைக்கு சமூக தீவு எட்டப்படும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications