இவ்வளவு கஷ்டமா.. ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்களே விவசாயிகள்! லஞ்சம் பெறுவதாக அன்புமணி பரபர புகார்
சென்னை: காவிரிப் பாசன மாவட்டங்களிலும் நெல்லுடன் உழவர்கள் தவித்து வருவதால் நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. உழவர்கள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று வரை ஒரே ஒரு கொள்முதல் நிலையம் மட்டும் தான் திறக்கப்பட்டு இருக்கிறது. பிற காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்றும், பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களிலும் மிகக் குறைந்த அளவில் தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலும் குவித்து வைத்துக் கொண்டு எப்போது அவற்றை விற்க முடியுமோ? என்ற ஏக்கத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றனர். அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் ஒரு மூட்டைக்கு ரூ.40 வீதம் கட்டாயக் கையூட்டு பெறப்படுகிறது. உழவர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்களில் இது குறித்து புகார் அளித்தும் கூட எந்தப் பயனும் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் உழவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் முழுவதையும் அதே நாளில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும். உழவர்களிடம் கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications