பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. அரசியல்வாதியாக இருக்க தகுதியற்றவர்.. ராமதாஸ் காட்டம்
சென்னை: பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அதிகாரப் போட்டி அதிகரித்துள்ளது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமிக்க எடுத்த முடிவு, இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்இருந்தே நீக்கி உத்தரவிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது தொடர்பாக அவர் பேசியதை பார்ப்போம்.

மோதல் எங்கே தொடங்கியது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த மே மாதம் 16ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ராமதாஸ் பேரனும் மாநில இளைஞர் அணி தலைவருமான முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தார்கள். மற்ற அனைவரும் புறக்கணித்து விட்டார்கள்.
நிர்வாகிகள் நீக்கம்
அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் ஆகிய 3 பேர் மற்றும் மாநில பொருளாளர் திலகபாமா உட்பட 80 சதவீத நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த ராமதாஸ், பல்வேறு கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்தார். பதிலுக்கு அன்புமணியும் கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்தார். இருவரும் நீக்குவதும், சேர்ப்பதும் என மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
ராமதாஸ் பதில்
கடந்த ஜூலை 3ம் தேதி தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, எம்எல்ஏ அருளை நீக்கியது தொடர்பாக செய்தியார்கள் கேள்வி எழுப்பினார்கள் அதற்குப் பதிலளித்த ராமதாஸ், நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமக கொறடாவாக அருள் தொடர்வார் என்றார்.
நோட்டீஸ்
இப்படி மாறி மாறி நிர்வாகிகள் நீக்கம், நியமனம் என்று இருவரும் அறிவித்து வருவதால், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு அன்புமணி உரிய பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
காலக்கெடு விதிப்பு
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 4-ந்தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. அந்த கூட்டம் முடிந்ததும் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது ராமதாஸ் கூறுகையில், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் வருகிற 10-ந் தேதிக்குள் (நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அன்புமணி நீக்கம்
அதன்படி காலக்கெடு நேற்று (செப்டம்பர் 10) முடிவடைந்தது. அன்புமணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போதுஅவர் கூறும் போது, பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அன்புமணியைஅடிப்படை உறுப்பினர் மற்றும் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன்.

எந்த பதிலும் அளிக்கவில்லை
பட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு எழுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி எந்த பதிலும் அளிக்கவில்லை.. இரண்டு முறை அவகாசம் தந்தும், நேரிலோ அல்லது எழுத்து பூர்வமாகவோ அல்லது கடிதம் மூலமாகவே எந்த பதிலும்அளிக்கவில்லை. எனவே அவர் 16 குற்றச்சாட்டுகளையும் ஏற்பதாக அனுமானிக்கப்படுகிறது. எனவே அன்புமணி பாமகவில்அடிப்படைஉறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன்.
ராமதாஸ் காட்டம்
அன்புமணியுடன் சேர்ந்து செயல்பட்டவர்கள் திருந்த வாய்ப்பு தருகிறேன். அவர்கள் மீண்டும் வந்தால் பாமகவில் சேர்க்க தயாராக உள்ளேன்.அப்பா சொல்வதை கேளுங்கள் என்று மூத்தவர்கள் அறிவுரை கூறியும் அன்புமணி கேட்கவில்லை. அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. இரா என்ற இனிசியலை மட்டும் அன்புமணி பயன்படுத்தலாம். இனி பெயருக்கு பின்னால் ராமதாஸ் என்று அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸ் கூறினார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications