கிரிக்கெட்: நீயா நானா கோபிநாத்..வசமாக சிக்கிய 'மாஜி கேப்டன்' ஶ்ரீகாந்த்- முகம் போன போக்கு இருக்கே!
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் ஜூரம் டிவி சேனல்களையும் விட்டு வைக்கவில்லை. சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அலசுகிற விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி இந்த வாரம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து நடத்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்த நீயா நானா நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதில் 1983-ல் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த ஶ்ரீகாந்த் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் நானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். வழக்கம் போல பங்கேற்பாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்த முடித்த உடன் சிறப்பு விருந்தினர்கள் திரும்பினார் ' கோபிநாத்'.

டே... புடலங்கா: இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் என்ற ஶ்ரீகாந்த் பேசுகையில், நான் இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு பர்ஸ் டைம் வரேன். நானி கொஞ்சம் ஓவராக நான் தான் இண்டியன்னு காமிச்சுகிட்டு இருக்கான். டே.. நாங்களும்தான் இண்டியன்ஸ்.. புடலங்கா நீ மட்டும்தான் இண்டியனா.. நானி தப்பா பேசுறான் என எரிச்சலான முகத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நானி குறுக்கிட 'டேய் இருடா' என வழக்கம் போல 'ஏகவசன' பாணியிலேயே ஶ்ரீகாந்த் பேசினார்.
இந்தியாவுக்கு டூர் வந்த பாக். டீம்: மேலும், பாகிஸ்தான் எல்லாம் இந்தியாவுக்கு டூர் வந்திருக்காங்க.. இதான் ஹைதரபாத், இதான் கொல்கத்தா, இதனால் மெட்ராஸ் என்றும் ஶ்ரீகாந்த் தமக்கே உரித்தான எகத்தாள உடல் மொழியுடன் பேசினார். இதனை ஏற்க முடியாது என நானி குறுக்கிட்டு மறுத்து பேசினார். அத்துடன் உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று எனவும் நானி குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் டீம் சுற்றுலா : உடனே இருக்கையை விட்டு ஶ்ரீகாந்த் எழுந்து நோ நோ அதெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டு பாகிஸ்தான் அணியில் யாரெல்லாம் விளையாடவிலை என பட்டியல் போட்டார் ஶ்ரீகா எனும் ஶ்ரீகாந்த். இதனையு மறுத்த ஶ்ரீகாந்த் எழுந்து நின்று, நக்கலாக இதான் அண்ணா அறிவாலயம் அப்படின்னு போய் பார்த்துட்டு வருவாங்க இதான் அண்ணா யுனிவெர்சிட்டின்னு, இதான் மெரினா பீச்சுன்னு பார்த்துட்டு வருவாங்க என்றார்.

கோபிநாத் பதிலடி: அங்கதான் கோபிநாத் களத்தில் குதித்தார். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட நீங்க (இந்திய அணி) போனப்ப கூட, நீஙக்ளே கிட்டத்தட்ட அந்த மூடில்தான் (இதான் அண்ணா அறிவாலயம் அப்படின்னு போய் பார்த்துட்டு வருவாங்க இதான் அண்ணா யுனிவெர்சிட்டின்னு, இதான் மெரினா பீச்சுன்னு பார்த்துட்டு வருவாங்க) போனீங்க.. ஆனா ஜெயிச்சுட்டு வந்தீங்க என சொல்ல அப்போது ஶ்ரீகாந்த் முகம் எப்படிப் போனது என்பதைத்தான் இங்கே இருக்கிற படங்கள் வெளிப்படுத்துகின்றன. கோபிநாத்தின் பாயிண்ட்டை நானி எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார். இந்த வீடியோ கிளிப்பிங்தான் சமூக வலைதளங்களில் இப்போது அதிகமாக பகிரப்பட்டும் வருகிறது.












Click it and Unblock the Notifications