வெளிவரும் பழைய சென்னை! மெரினா கடற்கரையில் தோன்றிய பழங்கால சிலை! ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பழங்காலத்தை சேர்ந்த சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னைக்கு ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் வந்தனர். ஆனால் அதற்கு முன்னரே சோழர்கள், பல்லவர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்கள் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். சென்னையின் திருவொற்றியூர் தொடங்கி, மயிலாப்பூர் வரை உள்ள கோயில்களே இதற்கு சாட்சி. இது தவிர ஏராளமான மண்டபங்கள், நினைவு தூண்கள் சென்னையின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் இதன் பழமையை மறைத்துவிட்டன.

இப்படி இருக்கையில்தான் சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பழங்காலத்தை சேர்ந்த சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தகவலை அறிந்து வந்த காவல்துறையினர் சிலையை கைப்பற்றி மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சிலை திருமாலின் உருவத்தை போன்று இருப்பதாக அதை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக இதுபோல கடந்த 2022ம் ஆண்டும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இரண்டு சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை என்று அடையாளம் காணப்பட்டது. இரண்டாவது சிலை முருகன் உருவம் பொறித்ததாகும். இதனையடுத்து சிலைகளை மீட்ட காவல்துறையினர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications