அறிவாலயம் வருகிறார்.. சந்திரபாபு நாயுடு ஏன் இப்போ.. இங்கே வரணும்.. என்னாவா இருக்கும்!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அறிவாலயம் வர உள்ளார்.
சென்னை: ஆந்திராவில் தேர்தலை முடித்துவிட்டு, அடுத்தக்கட்ட வேலையில் ஜரூராக இறங்கி உள்ளார் சந்திரபாபு நாயுடு!
இந்த தேர்தலில் அகில இந்திய அளவில் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் செயல்பாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து வருகிறது.
ஆந்திர மாநில தேர்தலுக்கு முன்னமேயே மம்தா பானர்ஜி பொதுக்கூட்டம் முதல் அனைத்துக்கும் ஆதரவு கரம் நீட்டினார். இதேபோல திமுக தலைவர் ஸ்டாலினையும் அவரது வீட்டிலும், டெல்லியிலும் அடிக்கடி சந்தித்து பேசினார். குறிப்பாக கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய மிக முக்கிய பணியைதான் நாயுடு பலமுறை மேற்கொண்டார்.

கூடுதல் பலம்
இப்போது நிலைமை, மத்தியில் பொறுத்தவரை காங்கிரஸை விட பாஜகவின் பலம் கூடி உள்ளதாகவும், மோடி-அமித்ஷா என்ற இரட்டையர்கள் இன்னும் 20 ஆண்டு காலம் ஆட்சி செலுத்துவார்கள் என்று ஒரு தகவல் வந்தவண்ணம் உள்ளது. அதேபோல, தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாகவும் உளவுத்துறை தகவல்கள் வருகின்றன.

வாக்குப் பதிவு இயந்திரம்
சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடந்து முடிந்த எம்பி, எம்எல்ஏ தேர்தலின்போது, பெரும்பாலான வாக்குச் சாவடிகளில்வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் சென்று புகார் அளித்தார் நாயுடு. இந்த நிலையில்தான் சந்திரபாபு நாயுடு ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

திருவாரூர் பிரச்சாரம்
இந்த விவகாரம் தொடர்பாகவோ அல்லது தேர்தலுக்கு பின் கூட்டணி குறித்தோ ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்டாலினோ திருவாரூரில் இன்று பிரச்சாரம் செய்கிறார். அதனால் நாயுடுவை நேரில் சந்தித்து பேச முடியாது என்பதால், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் சந்திர பாபு நாயுடு.

முக்கிய சந்திப்பு
தன்னுடைய சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு நாயுடு வருவதாக சொல்லப்பட்டாலும், இது தேர்தல் சமயம் என்பதால் திமுக நிர்வாகிகளுடன் நடக்க போகும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications