Vidaamuyarchi: படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அனிருத்தை திடீரென மடக்கிய போலீஸார்! நடந்தது என்ன?
சென்னை: விடாமுயற்சி படம் பார்க்கச் சென்ற இசையமைப்பாளர் அனிருத்துக்கு போலீஸார் ரூ 1000 அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
நடிகர் அஜித்குமார், திரிஷா நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. இந்த படம் நேற்றைய தினம் வெளியானது. முதல் நாளே அஜித் படத்தை பார்க்க அவருடைய ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர்.

ஒவ்வொரு இடத்திலும் அஜித்தின் கட் அவுட்டுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. ஒரு சில தியேட்டர்களில் அஜித்திற்கு பீர் அபிஷேகம் கூட செய்திருந்தனர். அஜித்தின் படம் ரிலீஸானதால் தியேட்டர் இருந்த இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது.
துணிவு படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருப்பதால் அதன் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அஜித் ரசிகர்கள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அவரை திரையில் பார்க்க ஆவலுடன் இருந்தனர்.
இந்த நிலையில் அஜித்தின் குழு கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் 3ஆம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததால் விடாமுயற்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அடுத்ததாக குட் பேட் அக்லி படம் ரிலீஸானது.
இசையமைப்பாளர் அனிருத் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் விடாமுயற்சி படம் பார்க்க நேற்று வந்திருந்தார். இதையடுத்து படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
படம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் வெளியே வந்த அனிருத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதாவது படத்தை பார்க்க வேண்டிய ஆவலில் நோ பார்க்கிங்கில் அனிருத் காரை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இதனால் ரூ 1000 அபராதம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
இதனால் ஷாக்கான அனிருத் அபராதத்தை கட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அனிருத்தை போல பலரும் நோ பார்க்கிங்கில் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளை நிறுத்திவிட்டு அபராதம் செலுத்தினர்.
அது போல் சில தியேட்டர்களில் பார்க்கிங் ஃபுல்லானதால் சாலைகளிலேயே வாகனத்தை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்த ரசிகர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அனிருத்திற்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications