கண்ணாமூச்சி ரே ரே".. கள்ளக்காதலனுக்காக கணவனை கொல்ல பலே பிளான் போட்ட அனிதா.. பரபர தகவல்கள்
Recommended Video

சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி காதலனை ஏவி கணவனை போட்டு தள்ள திட்டம் போட்ட மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கதிரவனுக்கும் (30) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் (25) கடந்த 13 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சென்னையை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் ஒரு வீட்டில் இருவரும் குடிவந்தனர்.
கதிரவன் சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். புதுமணத் தம்பதியான கதிரவனும் அனிதாவும் நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது கடற்கரை சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் கதிரவனை தாக்கிய மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டனர்.
[ ஹனிமூன் சென்ற போது கோத்தகிரியில் வைத்து போட்டு தள்ள பிளான் செய்த அனிதா... 2 முறை எஸ்கேப் ஆன கதிரவன் ]

12 பவுன் நகை
எனினும் நகைகளை தர கதிரவன் எவ்வளவோ போராடினார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கி அவர்களிடம் இருந்த 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.

காயம் இல்லை
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கதிரவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிரவனின் உடலில் காயங்களை பார்த்த போது அவர் மூன்று முறை தாக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் அனிதா உடலில் ஒரு பொட்டு காயம் கூட இல்லாததையும் போலீஸார் கவனித்தனர்.

போலீஸார் ஆய்வு
எனவே கதிரவனை கொலை செய்யும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கும் என்று போலீஸார் சந்தேகித்து தங்கள் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அனிதா முன்னுக்குப் பின் முரணாக பேசியதை அடுத்து, அனிதாவின் செல்போன் எண்ணை போலீஸார் ஆய்வு செய்தனர்.

கொல்ல சதி
அவர் ஜெகன் என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஜெகனின் செல்போன் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போதுதான் அனிதாவே தன் கள்ளக்காதலன் ஜெகனுடன் சேர்ந்து கதிரவனை கொல்ல திட்டமிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.

திடுக் தகவல்கள்
தன்னிடமிருந்து நகை பறிக்கப்பட்டதாக அனிதா நாடகமாடியதும் அம்பலமானது. தீவிர விசாரணையில் தாக்குதலுக்கான பின்னணி உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. அனிதா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில் கல்லூரியில் படித்த போது ஜெகன் என்பவரை அனிதா காதலித்துள்ளார்.

ஜெகன், அனிதா கைது
ஆனால் விருப்பத்துக்கு மாறாக கதிரவனை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகும் ஜெகனுடன் பழக்கம் ஏற்பட்டதில் அவருடன் வாழ முடிவு செய்து கதிரவனை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி திருவான்மியூர் கடற்கரையில் கதிரவனுடன் அனிதா கண்ணாமூச்சி விளையாடும் போது ஜெகன் நண்பருடன் வந்து இரும்புக் கம்பியால் தாக்கினார். இதையடுத்து அனிதாவையும் ஜெகனையும் போலீஸார் கைது செய்தனர்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications