ஹனிமூன் சென்ற போது கோத்தகிரியில் வைத்து போட்டு தள்ள பிளான் செய்த அனிதா... 2 முறை எஸ்கேப் ஆன கதிரவன்
Recommended Video

சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் கணவனை கள்ளக்காதலன் வைத்து மனைவியே தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இது இரண்டாவது கொலை முயற்சி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கதிரவனுக்கும் (30) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் (25) கடந்த 13 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சென்னையை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் ஒரு வீட்டில் இருவரும் குடிவந்தனர்.
[ "கண்ணாமூச்சி லே லே".. கள்ளக்காதலனுக்காக கணவனை கொல்ல பலே பிளான் போட்ட அனிதா.. பரபர தகவல்கள் ]

கொலை முயற்சி
இருவரும் நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது மர்மநபர்கள் இருவர் கதிரவனை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் மனைவி அனிதாவே அவரது கள்ளக்காதலன் மூலம் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியதும் அது வெறும் தாக்குதல் அல்ல கொலை முயற்சி என்பது தெரியவந்தது.

திருமணம்
இதையடுத்து அனிதாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் பல திடுக் தகவல்களை அளித்தார். தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெகன். இவர் அனிதாவுடன் படித்தவர். இருவரும் படிக்கும் போதே காதலித்துள்ளனர். ஆனால் அனிதாவை அவரது பெற்றோர் கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

கோத்தகிரிக்கு தேனிலவு
இந்நிலையில் ஜெகனை மறக்க முடியாததால் கோத்தரிக்கு தேனிலவு சென்ற போது ஜெகனை போட்டு தள்ள அனிதா திட்டமிட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. இதனால் நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த போதுதான் திருவான்மியூர் கடற்கரைக்கு செல்லலாம் என கதிரவன், அனிதாவிடம் கூறியுள்ளார்.

கொள்ளை நாடகம்
இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த முயற்சித்த அனிதா இந்த தகவலை ஜெகனிடம் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி கதிரவனின் கண்களை கட்டி கொண்டு கண்ணாமூச்சி விளையாடிய போது மறைந்திருந்த ஜெகன் மற்றும் அவரது நண்பர் இருவரும் கதிரவனை இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை கொள்ளையடித்துவிட்டு யாருக்கும் சந்தேகம் இல்லாத வகையில் கொள்ளை நாடகம் நடத்தியது தெரியவந்தது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications