"ஏன்.. இன்னும் இறுக்கமா கட்டிப் பிடிங்க".. நாளுக்கு நாள் டென்ஷன் ஏத்தும் அனிதா.. புலம்பும் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் அனிதா அழுது கொண்டே இருப்பது எரிச்சலை தந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதுக்கெடுத்தாலும் அழுகாச்சி என்றால், எப்படிதான் ஷோ-வை பார்ப்பது என்று அனிதாவின் அழுகையை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்..

செய்தி வாசிப்பாளர் அனிதா, டிவியில் பார்க்கும்போதுவரை வேறு பிம்பமாக இருந்தார்.. இவருக்கு ஏராளமான ஃபேன்ஸ்களும், ஃபாலோயர்ஸ்களும் இருக்கிறார்கள்.. இனிமையான குரல், துறுதுறு முகம், க்யூட்டான செய்கைகளால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் அனிதா.

இந்த அடிப்படையில்தான் அவரை பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே கொண்டு வந்தனர்.. ஆனால், என்ன நினைத்து உள்ளே வந்தாரோ, வந்த நாள் முதல் அந்த முகத்தில் கண்ணீரையும் சோகத்தையும் தவிர வேறு எதையும் ரசிகர்கள் பார்க்க முடியவில்லை.

சுரேஷ்

சுரேஷ்

முதல் வாரம், கன்டன்ட் தருகிறார், அதற்காகத்தான் இப்படி தேவையில்லாமல் சுரேஷ் உட்பட எல்லோரிடமும் வம்பிழுக்கிறார் என்று நினைக்கப்பட்டது.. ஆனால், அதற்கு பிறகுதான் தெரிந்தது, அனிதா தொட்டதற்கெல்லாம் சீரியஸாக எடுத்து கொள்கிறார் என்பது.. மீதி நேரம், கேமிரா கான்சியஸுடனேயே நடமாடி கொண்டிருந்தார்.

 கோபம்

கோபம்

இதற்கெல்லாம் சேர்த்துதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கமலிடம் வசமாக சிக்கி சின்னாபின்னமானார்.. "ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்பதற்காக" எவ்வளவு முடியுமோ, அவ்வளவு இடித்துரைத்து கமல் பேசவும், அனிதாவின் முகம் மாற தொடங்கியது.. அப்போதும் அவர் அடங்கவில்லை.. "ஏன் மேல கோபமா இருக்கீங்க? கட்டிப்பிடிச்சுக்குங்க.. இன்னும் இறுக்கி கட்டிப்பிடிங்க" என்று அர்ச்சனாவை கட்டிக் கொண்டு புலம்பினார்.

 எரிச்சல்

எரிச்சல்

இதெல்லாம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடியும் என்று பார்த்தால், நேற்றுகூட கன்பெக்‌ஷன் ரூமில் கதறி கதறி வைத்திருக்கிறார்.. புரமோவில் வரவேண்டும் என்பதற்காகவே இப்படி அழுது புலம்புகிறாரா? அல்லது அவரது இயல்பே இப்படித்தானா என்ற ரசிகர்கள் குழம்பியும், எரிச்சலைந்தும் வருகின்றனர்."நான் ரொம்ப தனியா இருக்குற மாதிரி இருக்கு... இப்படி எல்லாம் இருந்ததே இல்லை.. பிடிச்சவங்க சொல்லுறத கேக்குறதா? இல்ல மனசு சொல்லுறத கேக்குறதா?ன்னு ஒரு போராட்டம்.. ஒரு நெகட்டிவ் ஃபீல் இருக்கு" என்று கதறி கதறி அழுகிறார்.

 நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

4 நாளைக்கு முன்பு நடந்த சண்டையில், "நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை, பொண்ணு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி" என்று சொன்னவர், பிறகு ஏன் இப்போது வரை சின்னக்குழந்தை மாதிரியே அழுது கொண்டிருக்கிறார், ஜாலியா இருக்கும்னு நினைச்சுதான் அனிதாவை ரசிக்க ஆரம்பிச்சோம்.. இப்படியே அழுதுட்டு இருந்தால் அந்த வீட்டில் ஒதுக்கி ஓரங்கட்டி அனுப்பிடுவாங்க" என்று நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+