தொழில் முனைவோராக ஆசையா? அண்ணா பல்கலைக்கழகத்தின் "அண்ணா இன்குபேட்டர்"
சென்னை: இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிக் காட்டும் அண்ணா இன்குபேட்டர் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து அண்ணா இன்குபேட்டரின் சிஇஓ மற்றும் இயக்குநர் உமா மகேஸ்வரி கூறியதாவது: 2019 ஆம் ஆண்டு அண்ணா இன்குபேட்டரை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியது. தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் சார்ந்த , ஸ்டார்ட் அப்களை உருவாக்க திட்டமிட்டு தொடங்கப்பட்டது.

இன்குபேட்டரில் முதல் முறையாக தொழில் தொடங்கும் எண்ணத்துடன் வரும் அனைவருக்குமே அனைத்து விதமான உள்கட்டமைப்புகள் உள்ளன. ஆரம்ப நிலையில் தொழில்களுடன் வருவோர், அட்வான்ஸுடு லெவலுக்கு கொண்டு செல்லும் வகையில் இன்குபேட்டரில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.
StartupTN தொழில் முனைவோர்களுக்கு உதவி வருகிறது. நிதியை எப்படியெல்லாம் பெறுவது உள்ளிட்டவைகளுக்கான பயிற்சியையும், விழிப்புணர்வையும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு அளித்துள்ளது. சென்னை மட்டுமில்லாமல் கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுடன் நாங்கள் இணக்கமாக பணியாற்றி வருகிறோம்.
இதுவரை 38 ஸ்டார்ட் அப்ஸ்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். மேலும் 36 ஸ்டார்ட் அப்ஸ்கள் செயல்பாட்டில் இருக்கிறது. மேலும் ஒரு 15 ஸ்டார்ட் அப்ஸ்கள் அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறி கொண்டு வருகிறது. இந்த இன்குபேட்டரை பொருத்தமட்டில் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்கள் கொண்டவர்கள் இங்கு வந்து பயன்பெறலாம்.
https://annaincubator.org என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு தமிழக அரசின் ஆதரவும் எங்களுக்கு உண்டு என உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications