அரசு நிகழ்வில் திடீரென மயங்கி விழுந்த திமுக எம்.எல்.ஏ.! பதறிப்போன அமைச்சர்! தாங்கிப்பிடித்த அதிகாரி!
சென்னை: அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன், திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மோகன் எம்.எல்.ஏ. மயங்கி விழுந்த போது அவரது அருகில் நின்ற அதிகாரிகள் தாங்கிப்பிடித்து தண்ணீர் தெளித்து காற்று வருவதற்காக விசிறியும் விட்டனர். இதனிடையே இதைப் பார்த்த அமைச்சர் மா.சுப்ரமணியன் பதறிப்போனதோடு மோகனை மருத்துவமனை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

சென்னை அமைந்தகரையில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியனோடு அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மோகனும் கலந்துகொண்டார். காற்றோட்டம் இல்லாத பகுதியில் நிகழ்ச்சி நடந்ததால் அவருக்கு வியர்த்து கொட்டியபடி இருந்திருக்கிறது.
அதேபோல் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் காற்றில்லாமல் அவதிப்பட்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் மோகன் எம்.எல்.ஏ.வும் மயங்கி விழுந்திருக்கிறார். இதனிடையே தண்ணீர் தெளித்து காற்றோட்டமிக்க பகுதிக்கு அழைத்துச் சென்றதும் மோகன் எம்.எல்.ஏ. இயல்பு நிலைக்கு திரும்பினார்.
அண்ணா நகர் மோகனை பொறுத்தவரை தமிழகத்திலேயே அதிக சொத்துக்கள் கொண்ட பணக்கார எம்.எல்.ஏ. என்பதும் ஆன்மிகத்தில் அதிக நாட்டமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை என்பதால் இன்று கூட அவர் விரதம் ஏதும் இருந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications