ஆயுத பூஜை..பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சொன்ன குட்நியூஸ்
சென்னை: ஆயுதபூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லுரிகளுக்கு 4 நாட்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
நாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த வாரம் தொடங்கியது. நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் சிறப்பான விழாக்களாக கொண்டாடப்படும். முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியை போற்றி வணங்குகின்றனர்.
செய்யும் தொழிலையும் கல்வியையும் போற்றும் வகையில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. வெற்றி தரும் நாளாக விஜய தசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் அனைத்து நிறுவனங்களிலும் விடுமுறை அறிவிப்பது வழக்கம்.

பள்ளிகளுக்கு விடுமுறை
அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தொடர் விடுமுறை
சனிக்கிழமை 1ஆம் தேதி அரசு விடுமுறை நாளாகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

5 நாட்கள் விடுமுறை
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்டோபர் 3ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

சொந்த ஊர் பயணம்
பொறியியல் கல்லூரிகள், அரசு கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தனியார், அரசு நிறுவனங்களின் பணியாற்றுபவர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் ஏராளமானோர் ஆயுதபூஜை விடுமுறைக்கு சோந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் ரயில்கள், பேருந்துகளில் செல்பவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications