Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட்டச்செயலாளருடன் பேசியதற்கு என்னை விசாரிக்கனுமா?அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான 2-வது எஃப்ஐஆர் என்ன ஆனது என்றும், திமுக வட்டச்செயலாளருடன் பேசியதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்த நிலையில் இதற்கு மா சுப்பிரமணியின் பதில் அளித்துள்ளார். இது எல்லாம் ஒரு குற்றச்சாட்டா என்றும், இது என்ன குற்றச்சாட்டு என்று அண்ணாமலைக்கு தெரியுமா? என்றும் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகால ஆயுள் தண்டணை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஞானசேகரன் மீதான 2-வது எஃப்ஐஆர் என்ன ஆனது என்றும், அதிகாரிகளுக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு என்றும் முதல்வர் ஸ்டாலினும், காவல் துறையினரும் பதில் கூற வேண்டும் என கூறியிருந்தார்.

anna-university-case-minister-ma-subramanian-responds-to-annamalai-allegations

மேலும் 170-வது வட்டச் செயலாளர் திமுக கோட்டூர் சண்முகமும் ஞானசேகரனும் 25 ஆம் தேதி 6 முறை பேசியிருக்கிறார்கள். சண்முகம் அமைச்சர் மா சுப்பிரமணியனிடமும் பேசியுள்ளார். அவர் எதற்காக பேசினார் என்று விசாரித்தார்களா.. இதற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இது எல்லாம் ஒரு குற்றச்சாட்டா? என்றும் அவருக்கே இது என்ன குற்றச்சாட்டு என்று தெரியுமா என்றும் கூறினார்.

மா சுப்பிரமணியன் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் இன்றைக்கு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதல்வர் கையில் இருக்கக் கூடிய காவல்துறை, 5 மாத காலத்தில் மிகப்பெரிய அளவிலான தண்டனையை பெற்று தந்து இருக்கிறது. நீதித்துறையே கூட காவல்துறையின் இந்த செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டை தெரிவித்துள்ளது.

இன்றைக்கு அண்ணாமலை சொல்லியிருப்பதை நானும் கூட பார்த்தேன். அவர் என் மீது என்ன கூறியிருக்கிறார் என்றால், சண்முகம் என்ற வட்ட செயலாளார் எனக்கு போன் செய்தார் என்று கூறியிருக்கிறார். இது எல்லாம் ஒரு குற்றச்சாட்டா?.. எனக்கு கீழே 83 வட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள். நான் ஒரு மாவட்ட செயலாளர். என் தலைமையில் இருக்கின்ற நிர்வாகத்தில் 82 வட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு நாளைக்கும் 10 முதல் 15 பேர் எனக்கு போன் செய்வார்கள். இந்த தேதி, இந்த நாளில் எனக்கு மாவட்ட செயலாளர் போன் செய்தார். அதனால் என்னை விசாரிக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவருக்காவது இது என்ன குற்றச்சாட்டு என்று தெரியுமா?.. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அண்ணாமலை அந்த வீடியோவில் கூறுகையில், "முதல்வர் ஸ்டாலினுக்கு இரண்டு பொறுப்புகள், 2 பதவிகள் இருக்கிறது. கோட்டூர் சண்முகமும் மா சுப்பிரமணியனும் தினமும் பேசுகிறார்களா.. தினமும் பேசுகிறார்கள் என்றால்.. நான் சொன்ன கடந்த 24 ஆம் தேதி மா சுப்பிரமணியனும் சண்முகமும் இரண்டு முறை பேசுகிறார்கள். அதன்பிறகு 6 நாட்கள் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை. இவங்க டீல் பேசுகிற ஆள் இல்லவே இல்லை..

24 ஆம் தேதி பேசிய பிறகு அவர்கள் திரும்ப பேசியிருக்கிறார்களா என்று பார்த்தால் அவர்கள் பேசவில்லை. 6 நாட்கள் அவர்கள் பேசவில்லை. 24 ஆம் தேதி பல விஷயங்கள் நடந்திருக்கு. அங்க தான் யார் அந்த சார் ஒளிஞ்சி இருக்காங்க.. நான் எதற்கும் பயப்பட போவது கிடையாது. ஒரு விஷயத்தை சொன்னேன்.. அதனை கையில் எடுத்து இருக்கிறேன். உடும்பு பிடியாக பிடித்து கடைசி வரை போவேன்..

நான் சாட்டையால் அடித்துக்கொண்டது, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் சகோதரனாக தான்.. எனவே தொடர்ந்து கேள்வி கேட்பேன்.. இந்த இடம் என்று பக்காவாக பிளான் செய்து அவர் அங்கு ஸ்கெட்ச் போட்டு செய்கிறார். அவர் மட்டும் தான் குற்றவாளியா? எனவே கேள்விகள் தொடரும்? காவல்துறையின் கையை யார் கட்டிப்போட்டனர்? இவ்வாறு அவர் கூறியிருந்ந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+