தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு! 5 மாதங்களாக நடந்தது என்ன? யார் இந்த ஞானசேகரன்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வெளியான நிலையில் இதுவரை நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
டிசம்பர் 23, 2024- நாடே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்

டிசம்பர் 24- மாணவியின் புகாரின் பேரில் பிரியாணிக் கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 28- பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
ஜனவரி 5,2025- ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
பிப்ரவரி 24- 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்
மார்ச் 7- சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம்
ஏப்ரல் 8- தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய ஞானசேகரன் மனு, குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
ஏப்ரல் 23 ஆம் தேதி சாட்சி விசாரணை தொடக்கம்
மே 20- அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
மே 25- ஞானசேகரன் வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை சிறப்பு மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு
மே 28- அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையொட்டி பிரியாணி கடை நடத்தி வந்தாராம். இவர் வேலை முடித்து விட்டு இரவு நேரத்தில் பல்கலைக்கழகத்தில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
அவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெண்களை மிரட்டி பணம் பறித்து அதில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications