900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை.. அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடந்தது?
சென்னை: தமிழகத்தில் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பெயரை பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது.

அதாவது தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக தங்களின் கல்லூரிகளில் பணியாற்றாத பேராசிரியர்களை போலியாக கணக்கு காட்டி உள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த போலி கணக்கு மூலம் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைகழக்கத்தில் இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளதாக புகார் கிளம்பியது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட குற்றச்சாட்டில், ‛‛தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில் (2023-2024) அக்கல்லூரிகளில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 175 பேர் பிஎச்.டி பட்டம் பெற்றவர்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் என்ற பகுதியில் ஒவ்வொரு கல்லூரியிலும் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களைக் காணலாம்.
இந்த முறைகேட்டால் மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் மத்திய கல்வி அமைச்சர், ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகம், தமிழக ஆளுநர், முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர் அனைவருக்கும் அனுப்பியுள்ளோம். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நினைத்தால் இந்த முறைகேட்டை ஒரே வாரத்தில் உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டது. இதையடுத்து கல்லூரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனியார் பொறியியல் கல்லூரிகள் செய்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தான் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நடந்தது. இதில் சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது மோசடியில் ஈடுபட்ட 295 தனியார் பொறியில் கல்லூரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக பெயர் பதிவு செய்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த 900 பேராசிரியர்கள் பிற கல்லூரிகளில் இனி பணியாற்ற முடியாது. இந்த பேராசிரியர்களின் பெயர் விபரங்களை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இதற்கிடையே மூவர் குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அந்த அறிக்கையை தொடர்ந்து 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீதும், 900 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை என்பது அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications