ஸ்பாட்டுக்கே போன மகளிர் ஆணையம்.. 7 மணி நேரம் விடலயே! அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் இன்றும் விசாரணை
சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய உண்மை கண்டறியும் குழுவினர் முதற்கட்ட விசாரணை முடித்து, கவர்னர் ரவியையும் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தனர். இந்நிலையில், மாணவி விவகாரம் தொடர்பாக இன்று 2வது நாளாகவும் மகளிர் ஆணையம் விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன்(37) என்ற நபரை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டங்கள்: இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர். இதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக 2 நபர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவையும் அமைத்துள்ளது.
அக்குழுவில் இடம் பெற்றுள்ள, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர், சென்னையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். நேற்றைய தினம் தங்களது முதல்நாள் விசாரணையை நடத்தியிருந்தனர்..
போட்டோக்கள்: அப்போது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், போட்டோவும் எடுத்துக் கொண்டனர். வன்கொடுமைக்கு ஆளான மாணவி, சம்பவத்தன்று உடன் இருந்த மாணவர், மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் விவரமாக கேட்டு குறிப்பெடுத்தனர்.
பிறகு, அண்ணா பல்கலை வளாகத்தில், எத்தனை, சிசிடிவிக்கள் உள்ளன? அவற்றில் எத்தனை செயல்பாட்டில் உள்ளன? அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகள் என்னென்ன? மாணவி பாலியல் வன்முறை விவகாரத்தில் கைதான ஞானசேகரன், எந்த நுழைவு வாயில் வழியாக வளாகத்திற்குள் சென்றார்? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தினர்.
அடையாளங்கள்: அதேபோல, பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை வெளியில் தெரியும்படி செய்தது யார் என்பது குறித்தும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி, தகவல்களை பெற்றுக் கொண்டனர்.
வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) 14 பேர் பார்த்ததாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் மூலமாக வெளியே கசிந்ததா என்றும் விசாரித்தனர். அவர்களை பற்றிய முழு விவரங்களை திரட்டி தருமாறு சிறப்பு புலனாய்வு குழுவிடம் கேட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகை: முதற்கட்ட விசாரணையை உண்மை கண்டறியும் குழுவினர், மாலை 5 மணியுடன் நடத்தி முடித்த நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று, பல்கலை வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, வழக்கு குறித்து ஆலோசனை நடத்தினர்
பிறகு, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை சந்தித்தனர்.. மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி, பெண் வழக்கறிஞர்கள் குழு, பெண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம், ஏபிவிபி மாணவர் சங்கத்தினர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களிடம் மனு கொடுத்தனர். இந்த வழக்கில் இதுவரை நடந்த விசாரணை விபரங்களை விரிவாக எடுத்துரைத்தார்கள்.
2வது நாள் விசாரணை: இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்களிடம் நேற்று 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணையை ஆணையம் நடத்துகிறது.. விசாரணை முழுமையாக நிறைவடைந்தபிறகு, அதன் அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என மகளிர் ஆணையக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல, மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக, சென்னை ஹைகோர்ட் ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேகா பிரியா, ஐய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்துள்ளது. இந்த குழுவினரும் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்..
எப்ஐஆர் காப்பி: அதேபோல, கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து, மாணவி பாலியல் வன்முறை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுள்ளனர். கைதான ஞானசேகரன் பின்னணி குறித்தும் விசாரித்து வருகின்றனர். அத்துடன், மாணவி பாலியல் வன்முறை தொடர்பான எப்ஐஆர்- அறிக்கையை பதிவிறக்கம் செய்த, 14 பேருக்கு சம்மன் அனுப்பி, விசாரிக்க போகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications