இது வங்கி ‘வால்ட்’ இல்ல.. ஊழல் பண மூட்டை.. ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை.. அண்ணாமலை தாக்கு!
சென்னை: 'இந்தியா' கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும், ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப் போவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ரூ.300 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக எஸ்.ஷிவ் கங்கா அண்ட் கம்பெனி கம்பெனி, பவுத் டிஸ்டிலரி பிரைவேட் லிமிடெட் மற்றும் ராணிசாத்தி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் புதன்கிழமை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திதிலாகரில் உள்ள தீபக் சாஹு மற்றும் சஞ்சய் சாஹு ஆகிய இரண்டு மதுபான முதலாளிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிறுவன உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 12 பேர் கொண்ட குழு தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், அலமாரிகளில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை பைகள் மற்றும் சாக்குகளை ஒரு பெரிய லாரியில் ஏற்றிய வருமான வரித்துறையினர் ஸ்டேட் வங்கியின் போலாங்கிர் கிளைக்கு கொண்டு வந்தனர். அங்கு 11 பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. இதில், சுமார் 300 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு, "நமது நாட்டு மக்கள் இதனைப் பார்க்க வேண்டும். நேர்மையாளர்களாக, நேர்மையின் முகமாக தங்களை காட்டிக் கொண்டு இத்தகைய தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்டது இந்த பணம். மக்களிடம் திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட இந்த பணம் மக்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி." எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒரு வங்கியுடைய பணப் பெட்டகம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.
— K.Annamalai (@annamalai_k) December 8, 2023
இது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான தீரஜ் சாகு என்பவர், ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள ₹300 கோடி பண மூட்டை. வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தி கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும்,… pic.twitter.com/lojmzs406Z
இந்நிலையில், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்படும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இது ஒரு வங்கியுடைய பணப் பெட்டகம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான தீரஜ் சாகு என்பவர், ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள ரூபாய் 300 கோடி பண மூட்டை.
வருமான வரித்துறை சோதனையில் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'இந்தியா' கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும், ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப் போவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஒரே நேரத்தில் ஓமன் மற்றும் மலேசியாவுடன் பேசிய மோடி.. மாஸ்டர் மூவ்! இனி பிரச்சனை இருக்காது! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications