கும்மிடிப்பூண்டியை தாண்டினால்.. ராகுல் காந்தி பேசுனது நினைவிருக்கா? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோடி சமூகம் குறித்து ராகுல், பேசியதை போல, சனாதனம் குறித்து உதயநிதி பேசியுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு வட மாநிலங்களைச் சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, இதுகுறித்த செய்தி ஒன்றை பகிர்ந்து சட்ட உரிமை கண்காணிப்பகம் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம்
இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கராறாக கூறியிருந்தார். அடுத்தடுத்த பேட்டிகளிலும் தான் பேசியது குறித்து உதயநிதி ஸ்டாலின் தெளிவான விளக்கமளித்து தன்னுடைய கருத்து சரியானதே என்று கூறி வருகிறார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரித்துள்ளார்.

அதாவது, "தமிழக பிரச்னை குறித்து பேசாமல், 'இந்தியா' கூட்டணி குறித்து பேச முதல்வர் புறப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டியை தாண்டி திமுக எதுவும் செய்ய முடியாது. மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி எப்படி பேசினாரோ அதேபோலதான், சனாதனம் குறித்தும் உதயநிதி பேசியுள்ளார். கடந்த 6 முறை ஆட்சியிலிருந்தும் சமூகநீதியை திமுகவால் கொண்டுவர முடியவில்லையா?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்திருந்தார்.
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜகவின் தேசிய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் அவரது எம்பி பதவி பறிபோனது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீட்டு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications