என்னுடைய தொகுதி எது? யாரும் சொல்ல மாட்டார்கள்.. தமிழக பாஜக நிலை இதுதான்.. கொந்தளித்த அண்ணாமலை!
சென்னை: எந்தவொரு வியூகமும் இல்லாமல் என்ன அரசியல் செய்ய முடியும் என்று பாஜக மையக் குழு கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எந்த வியூகத்தின் அடிப்படையில் 6 தொகுதிகளுக்கு தன்னை பொறுப்பாளராக நியமித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய அண்ணாமலை, தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன் தொகுதியை கூறினால் எப்படி வெற்றிபெற முடியும் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
சென்னையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் தலைமையில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாஜக ஆலோசனை
இந்த மையக்குழு கூட்டத்திற்கு பின் தமிழக பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகி பிரஷோப குமார் கொண்டு வரப்பட்டுள்ளார். பிஎல் சந்தோஷின் சென்னை வருகை பாஜகவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சீனியர்கள் பலருக்கும் டோஸ் விழுந்ததாக கூறப்படுகிறது.
அண்ணாமலை பேசியது என்ன?
இதனிடையே இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியது என்ன என்பது தொடர்பான விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி அண்ணாமலை, இந்த தேர்தலில் தமிழக பாஜகவின் அரசியல் வியூகம் தொடர்பாக என்னிடம் எந்தவொரு தகவலும் சொல்லப்படவில்லை. பாஜக வெல்வதற்கான வியூகம் தொடர்பாகவோ எதுவும் சொல்லவில்லை. திமுகவை வீழ்த்துவதற்கு என்ன வியூகம் உள்ளது?
பாஜக வியூகம் என்ன?
எந்தவொரு வியூகமும் இல்லாமல் எப்படி அரசியல் செய்ய முடியும்? என்னை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கிறார்கள். ஆனால் தொகுதி பெயரை கூட எனக்கு சொல்லாமல் பணியை செய்யுமாறு கூறுகிறார்கள். இப்போது கூட எனக்கான தொகுதியை கூறினால், பணியாற்ற தொடங்கிவிடுவேன். ஆனால் அதுகூட எனக்கு தெரியாமல் இருக்கும் சூழலே உள்ளது.
அண்ணாமலை கேள்வி
கமலாலயத்தில் உள்ள பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து கொடுத்துவிட்டால் போதுமா? களத்தில் பணியாற்ற வேண்டும். அதேபோல் எந்த வியூகத்தின் அடிப்படையில் 6 தொகுதிகளுக்கு என்னை பொறுப்பாளராக நியமித்தார்கள். அதுவும் பத்மநாபபுரம், மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமித்தது ஏன்? அதற்கான காரணம் என்ன?.
தொகுதி பெயர் என்ன?
என்னை பொறுத்தவரை வியூகத்தை விளக்கி கூறினால் ஒரு தொகுதியில் கூட பொறுப்பாளராக செயல்பட தயாராக இருக்கிறேன். அதனைப்பற்றி என்னிடம் எந்தவொரு ஆலோசனையும் செய்யாமல் நியமித்தது வருத்தம் அளிக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில், பாஜக தொண்டர்கள் எந்தவொரு வியூகமும், திட்டமும் இல்லாமல் எப்படி உழைக்க முடியும்.. இதனை சரி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications